பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பூர்ணிமாவின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது.
Poornima Ravi in First Photo After BB 7 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் பணப்பெட்டி உள்ளே அனுப்பப்பட்டிருந்த நிலையில் பதினாறு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் பூர்ணிமா ரவி.
இதற்கான ப்ரோமோ வீடியோ காலையிலேயே வெளியாகி இருந்த நிலையில் தற்போது பூர்ணிமாவின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது. வீட்டுக்கு சென்ற பூர்ணிமா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவ இந்த வாரம் வெறும் கையோடு வெளியாகி இருக்க வேண்டிய பூர்ணிமா 16 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியது அவருடைய புத்திசாலித்தனம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.