தமிழ் சினிமாவில் முதல் முறையாக உயரிய தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது பொன்னியின் செல்வன் 2.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சியான் விக்ரம், நடிகர் கார்த்தி, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான பிரயோக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் முதல் பகுதி திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இதற்கான பிரமோஷன் வேலைகள் தீயாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவில் 4DX உயரிய தொழில் நுட்பத்துடன் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் இடம் பிடிக்க உள்ளது.

3D-ன் அடுத்த கட்ட வளர்ச்சியான 4DX திரையரங்குகளில் இந்த படத்தை பார்ப்பவர்களை முழுமையாக இந்த படத்தின் சூழ்நிலைக்குள் கொண்டு செல்லும் என்பதை சிறந்த ஒன்று. இதனால் இந்த படத்தின் காட்சிகள் அனைத்தையும் தத்ரூபமாக நேரில் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.