பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு!!!… மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இதே சூட்டோடு பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு!!!… மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

இந்நிலையில் இந்த பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று படக்குழு வெளியிட இருப்பதாக புதிய தகவலை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் குறித்த ஸ்பெஷல் ஆன அப்டேட் இன்று மாலை நான்கு மணிக்கு வெளியாகும் என்ற தகவலை போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்து உங்களால் யூகிக்க முடிகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அது என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.