பொன்னி சீரியல் வைஷுவுக்கு என்ன ஆச்சு?.. கை காலில் கட்டுடன் அவரே வெளியிட்ட வீடியோ..!
பொன்னிஸ் சீரியல் வைஷு கை கால்களில் அடிபட்டு கட்டுப்போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் வைஷு சுந்தர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷு சுந்தர். அதனைத் தொடர்ந்து தற்போது பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருக்கிறார்.
மறுபக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்த் வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் வைஷு சுந்தர் நடித்து வரும் பொன்னி சீரியலில் சில நாட்களாக அவரை காட்டவில்லை என்ன காரணமாக இருக்கும் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார்.
அதில் ஷூட்டிங்கின் போது கை தோள்பட்டை எலும்பு மற்றும் காலில் அடிபட்டு வீக்கம் இருப்பது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
View this post on Instagram