Pettikadai

PettiKadai : இசக்கி கர்வணன் இயக்கம், தயாரிப்பு, மற்றும் திரைக்கதையில் சமுத்திர கனி, வீரா பொல்லம்மா,சாந்தினி, சுந்தர் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பெட்டிக்கடை.

உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைக்க அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும் விமர்சகர்களும் மத்திய அரசின் ஜி.ஸ்.டியை எதிர்க்கும் படமாக இப்படம் உருவாகி இருப்பதாக கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் சிறு குறு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவாகவும் இப்படம் உருவாகி இருப்பதால் மத்திய அரசால் சர்ச்சைக்குள்ளாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜி.எஸ்.டி-க்கு எதிரான திரைப்படமாக உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.