Petta Vijay Sethupathi : பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நண்பனா? வில்லனா? என இன்று நடந்து வரும் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா, சசிகுமார், நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா என பலர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ட.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் படு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் உட்பட ரசிகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய போது அரங்கமே அதிர்ந்தது.
அப்போது விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நீங்க ரஜினிக்கு வில்லனா? நண்பனா? என கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு விஜய் சேதுபதி வில்லன் தான் என கூறியுள்ளார்.
மேலும் ரஜினியை போன்ற எதிர்த்தால் தானே பெரியாளாக ஆக முடியும் எனவும் கூறியுள்ளார்.