நாளுக்கு நாள் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Petrol Price 11.11.19 : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை கீழே காணலாம்..
சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அமலுக்கு வந்த விலை :
பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 76.08 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து, லிட்டருக்கு 69.60 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது சென்னை நகருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிற மாவட்டங்களில் விலையில் சிறு மாற்றம் இருக்கலாம்.
மேலும் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய பெட்ரோல் விலை உயர்ந்தும் மற்றும் டீசல் விலை அதிரடியாக சரிந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.