நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் கொரானாவில் இருந்து மீண்டனர்! - அரசு மருத்துவர்கள் சாதனை

Patients Recovered from Corona in Dangerous Stage : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தடுப்பது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இந்தியாவிலும் இதுவரை கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் நெருங்கி வருகிறது. இவர்களில் 5 லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 80 முதல் 90 சதவீதம் வரை நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் இருவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 80 நாட்களுக்கு பிறகு இருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Viyatnam Registered 1st Corona Death

அரசு மருத்துவமனை மற்றும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் பூரண குணமடைந்து வீடு திரும்பிய இருவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் தங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை கூறியுள்ளனர்.

கொரானா வைரஸின் அபாய கட்டத்தில் இருந்த இவர்கள் இருவரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியதால் பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்‌.