Pandya and Rahul
Pandya and Rahul

Pandya and Rahul – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் இருவர் மேல் இருந்த தடை நீக்கபட்டுள்ளதாக பிசிசஐ அறிவித்து உள்ளது.

இந்தியா கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல். மற்றும் வேகபந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான பாண்டியா இருவரும் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அந்த நிழச்சியில் பெண்களுக்கு எதிரான கருத்துகளை கூறியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பிசிசிஐ அவர்களை இடைக்கால நீக்கம் செய்து இருந்தது. இதனால், இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனே இந்தியாவிற்கு திரும்பினார்கள்.

மேலும், இருவருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இருவர் மீதும் விசாரணை நிலுவையாயில் போடப்பட்ட நிலையில், பிசிசிஐ இருவரின் மீது விதித்த தடையை நீக்கி உள்ளது.

அந்த உத்தரவு உடனே நடைமுறைக்கு வந்துள்ளது. தடையை நீக்கியது மட்டும் இல்லாமல் அது உடனே நடைமுறைக்கு வந்துள்ளதால் ராகுல் மற்றும் பாண்டியா இருவரும் மகிழ்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here