தனத்தால் மீனா, முல்லை இடையே புதிய பிரச்சனை வெடித்துள்ளது.

Pandian Stores Episode Update 28.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மீனா தெருவில் அமர்ந்து கொண்டு கோதுமையை அலசி காய வைத்து ஈ, எறும்பு உட்காராமல் விசிறி கொண்டிருக்கிறார். எப்படி இருந்த என்ன இப்ப எப்படியெல்லாம் வேலை வாங்குகிறார்கள் என புலம்பிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் எதிரில் இருந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் வெளியே வருகின்றனர்.

விநாயகரை வழிபடும் முறையும் பலன்களும்.!

தனத்தால் மீனா, முல்லை இடையே வெடித்த பிரச்சனை.. பிரியப் போகும் குடும்பம்?? - பாண்டியன் ஸ்டோர் இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

ஐஸ்வர்யாவின் ஷால் தரையில் தேய்வதை பார்த்த கண்ணன் இந்த சமூக சேவையை எப்போ செய்ய ஆரம்பிச்ச? அப்படியே ரோடு பெருக்கிட்டு போவியா என கேட்டார். பிறகு அவரது ஷாலை சரி செய்தார். இதெல்லாம் நோட்டமிட்டுக் கொண்டிருந்த மீனா ரோட்ல செய்யவேண்டிய வேலையா இது என மனதுக்குள் சொல்லிக் கொண்டார். அங்க துணி துவைக்கிறேன் என்ற பெயரில் ரொமான்ஸ் நடக்குது. இந்த பக்கம் என்னடான்னா ஒரே ரொமான்ஸா இருக்கு. நம்ம ஆளு தான் இப்படி இருக்கான் போல என ஜீவாவை நினைத்து புலம்புகிறார்.

இந்த பக்கம் கடை கட்டும் இடத்தில் முல்லையும் கதிரும் இருக்கின்றனர். அப்போது வங்கியிலிருந்து அசிஸ்டன்ட் மேனேஜரும் நேற்று வந்த நபரும் பணத்தோடு வருகின்றனர். மூர்த்தி இல்லையா எனக் கேட்டதற்கு அண்ணனுக்கு ஏடிஎம்க்கு இடம் கொடுக்க பெருசா விருப்பமில்லை. நம்ம கடைக்கு இடம் தேவைப்படும்னு சொல்றாரு என சொன்னதும் அந்த அசிஸ்டன்ட் மேனேஜர் தன்னுடைய வங்கி அலுவலரை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். ஏன்பா இத நேத்தே சொல்லி இருக்கலாம்ல என அந்த வங்கி அலுவலரும் கதிரை திட்டிவிட்டு கிளம்புகிறார்.

Viswasam படத்தின் காப்பியா? – Annaatthe Trailerயை கலாய்க்கும் ரசிகர்கள்!

பிறகு கதிர் வேலை செய்பவர்களின் ஆள் குறைவாக இருப்பதை பார்த்து ஒருவரை அழைத்து எங்கே அவர் என கேட்கிறார். அவர் இன்னைக்கு லீவு வேறு ஒருத்தரை கூப்பிட்டு இருந்தேன். ஆனால் அவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் வருவேன் என சொல்கிறார் என்று கூறியதும் ஆயிரம் ரூபாய்ல அதிகம் நானே வேலை செய்கிறேன் என களத்தில் இறங்குகிறார் கதிர். எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக் கொண்டு கதிர் செய்கிறார்.

தனம் தன்னுடைய குழந்தையை கொஞ்சிக் கொண்டு அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது முல்லை கயலை தூக்கிக் கொண்டு உள்ளே வருகிறார். அப்போது தனம் கயலை வாங்கி கொஞ்சிக் கொண்டிருக்கிறார். கயல் பாப்பா தனத்துடன் இருப்பதால் முல்லை அதற்குள் பெட்ஷீட் ஒன்றை காய வைத்து விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு பின்பக்கம் செல்கிறார். இடுப்பு வலியால் அவதிப்பட கயலையும் தூங்க வைத்து விட்டு தனமும் படுத்து அசந்து தூங்கி விடுகிறார்.

பின்பக்கம் முல்லையும் மீனாவும் துணி உலர்த்திக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். கயல் எங்கே என கேட்டதற்கு தனம் அக்கா வச்சுட்டு இருக்காங்க என முல்லை சொன்னதும் சரி என வேலை பார்க்கிறார் மீனா. கூட்டுக்குடும்பத்தில் வாக்கப்பட்டு எவ்வளவு கஷ்டப்படுகிறான் என புலம்புகிறார் மீனா. கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனிக் குடித்தனத்தில் ஜாலியாக இருக்கிறார்கள் என கூறுகிறார். பின் மீனா சரி நான் உள்ளே செல்கிறேன் என உள்ளே செல்கிறார்.

அதற்குள் தனம் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த கயல் பாப்பா தூக்கத்தில் இருந்து எழுந்து அழுதுகொண்டே வெளியில் தவழ்ந்து செல்கிறது. தனம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதால் அவருக்கு கயல் எழுந்தது தெரியவில்லை. கயல் அழுது கொண்டு வருவதைப் பார்த்த மீனா பதறிப் போய் ஓடி சென்று தூக்குகிறார். பின்னர் முல்லையும் உள்ளே வர என்னாச்சுங்க என கேட்கிறார். நான் கயல் பாப்பாவை உங்க கிட்ட தானே பாத்துக்க சொன்னேன். உங்களால முடியாதுனா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. அக்கா பார்த்துக்கிற லட்சணத்தை பாருங்க. ‌ அவங்க நல்லா படுத்து தூங்கிட்டு இருக்காங்க என புரியாமல் பேசுகிறார்.

முல்லை இல்லங்க அக்கா அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க என கூற அவங்க எது பண்ணாலும் சரி நான் என்ன சொன்னாலும் அது தப்பா என மீனா கோபப்படுகிறார். உங்க குழந்தைனா உங்களுக்கு கஷ்டம் தெரியும், என் குழந்தை தானே உங்களுக்கு எப்படி புரியும் என முகத்தில் அடித்தாற் போல கூறிவிட்டு மீனா உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்.