கண்ணனுக்கு உணவு பரிமாற சொன்ன தனம்.. பின்னர் நடந்ததை நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் மூர்த்தி.

Pandian Stores Episode Update 25.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தனம் அத்தை இறப்பதற்கு முன்பாக தன்னிடம் பேசியது குறித்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரிடமும் கூறுகிறார். கண்ணனை கைவிட்டு விடாதீர்கள் என கூறியதை பற்றியும் சொல்லி உள்ளார். இதனை கேட்ட மீனா அதனாலதான் கண்ணனே வீட்டை விட்டு வெளியே அனுப்பும்போது அமைதியா இருந்தீங்களா என கேட்கிறார்.

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

கண்ணனுக்கு உணவு பரிமாற சொன்ன தனம்.. கதறி அழுத மூர்த்தி - பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்

இந்த விவாதத்துக்கு பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து சாப்பிடும் நேரத்தில் கண்ணனை ஊர் தலைவர் ஒருவர் அழைத்து வந்து அமர்ந்து சாப்பிடுமாறு கூறுகிறார். கண்ணன் தன்னுடைய அண்ணன் மூர்த்தி பக்கத்தில் அமர்கிறான். தனம் உணவு பரிமாறுமாறு முல்லையிடம் கூற அவரும் உணவு பரிமாறுகிறார். கண்ணன் அமர்ந்ததும் மூர்த்தி சாப்பிடுவதை விட்டு எழுந்து கொண்டார். இதனால் கண்ணன் நீங்க சாப்பிடுங்க நான் வெளியே போறேன் என கூறிவிட்டு வெளியே வந்துவிடுகிறார். பின்னர் ஐஸ்வர்யா கண்ணனை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

அதன் பின்னர் நடந்ததை நினைத்து கிணற்றுக்கு அருகில் நின்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார் மூர்த்தி‌. தன்னுடைய இரண்டு தம்பிகளையும் அழைத்து இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பாக்கல கண்ண மூடி கண்ண திறக்கிறதுக்குள்ள ஏதேதோ நடந்திருச்சு. கண்ணனை சேர்த்துக்கணும் என்று மனசு சொன்னாலும் அவனை பார்க்கும் போதெல்லாம் அவன் செய்ததுதான் கண்முன் வந்து போகிறது. அதனை ஏற்றுக்கொள்ள என் மனசு இடம் கொடுக்கவில்லை என கூறி அழுகிறார்.

Master படம் நல்ல Opening கொடுத்தது! – Ajith பட தயாரிப்பாளர் T. G. Thyagarajan பேட்டி

நான் ஏதாச்சும் தப்பு செய்தால் என்கிட்ட சொல்லுங்க. நான் செய்வது ஏதாவது பிடிக்கவில்லை என்றாலும் என்னிடம் சொல்லுங்கள். ஆனால் நீங்களும் என்ன விட்டுட்டு போயிடாதீங்க என இரண்டு தம்பிகளிடம் கூறுகிறார். இதனையடுத்து இருவரும் என்ன இப்படி எல்லாம் பேசுரிங்க அதெல்லாம் எதுவும் நடக்காது என ஆறுதல் கூறுகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட்.