ஓடிடியில் ரிலீஸாகும் இந்த வார புதுப்படங்கள்..
தீபாவளி பண்டிகை முடிந்தாலும், அங்கங்கே பட்டாசு சத்தம் கேட்கத்தான் செய்கிறது. அதுபோல, இந்த வாரம் ஓடிடியில் புதுப்படங்கள் வரிசை கட்டுகின்றன. அதன் விவரம் காண்போம்..
வேட்டையன்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கிய திரைப்படம் வேட்டையன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தீபாவளி ரிலீஸ் படங்களால் வேட்டையன் படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டுள்ளதால், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஏ.ஆர்.எம்: டொவினோ தாமஸ் நடிப்பில், மலையாளத்தில் வெளியான படம் ஏ.ஆர்.எம். இப்படத்தை ஜிதின் லால் இயக்கி இருந்தார்.
இப்படமும் வருகிற நவம்பர் 8-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
கோழிப்பண்ணை செல்லதுரை: தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சீனு இராமசாமி இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் கோழிப்பண்ணை செல்லதுரை.
இப்படத்தில் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் வருகிற நவம்பர் 5-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
சிட்டாடெல் ஹனி பனி: சமந்தா நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள வெப் தொடர் சிட்டாடெல் ஹனி பனி. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கி உள்ளனர்.
இதில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இந்த வெப் தொடர் வருகிற நவம்பர் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
தீபாவளி கொண்டாட்டம், மேலும் தொடருது.!