ப்ளடி பெக்கர் படம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரம்..
தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்த படம் ப்ளடி பெக்கர். இப்படத்தை சிவபாலன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார்.
இப்படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் கவின் உடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
ப்ளடி பெக்கர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவிக்கவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாத அளவுக்கு வசூலித்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாட்களில் 6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
அதன்படி, முதல் நாளில் 2.15 கோடியும், இரண்டாம் நாளில் 1.90 கோடியும், மூன்றாம் நாளில் 1.45 கோடியும் வசூலித்திருந்த இப்படம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று வெறும் 90 லட்சம் மட்டுமே வசூலித்து இருக்கிறது. வார நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அடிவாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ப்ளடி பெக்கர் படத்தை 10 கோடி பட்ஜெட்டில் தான் தயாரித்து இருக்கிறார் நெல்சன். தற்போது, உலகளவில் 4 நாட்களில் ப்ளடி பெக்கர் திரைப்படம் ரூ.12 கோடி வசூலித்துள்ளதால், நெல்சனுக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றே கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இருப்பினும், நகைச்சுவையை விரும்பும் ரசிகர்களால் இப்படம் வரவேற்பையும் பெற்று வருகிறது.