விஜய்யின் ‘தளபதி-69’ படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் விலகல்; காரணம்.?
தளபதி விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது விலகியுள்ளார். இது குறித்த விவரம் பார்ப்போம்.
தளபதி-69 திரைப்படத்தை, எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
அரசியல், திரைப்பணி என செம பிசியாக இருக்கிறார் விஜய். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது.
இதைத்தொடர்ந்து, இன்று தளபதி 69 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் விஜய் உட்பட பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தளபதி 69 படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது. அவர், தளபதி 69 படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடிப்பதாக இருந்ததாகவும், பின்பு வெளியேறியதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
படத்தில், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், ப்ரியாமணி என இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதில், சத்யராஜும் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பதாக இருந்ததாகவும், அதன் பிறகு கால்ஷீட் பிரச்சனை காரணமாக சத்யராஜ் இப்படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல் வந்துள்ளது.
ஆனால், இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. உண்மையிலேயே கால்ஷீட் காரணமா? அல்லது அரசியல் நிலைப்பாடு காரணமா? எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தளபதி 69 படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு மே வரை நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது.
தளபதிக்கு கடைசிப் படம், அதனால் கவனமா எடுக்கணும் இல்லையா.!
