Official Release Date of Master

ஜனவரி 13-இல் மாஸ்டர் திரைப்படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Official Release Date of Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி அர்ஜுன் தாஸ், மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம் என பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் ஜனவரி 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியில் மட்டும் 14ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.