NGK அப்டேட்

NGK அப்டேட் கேட்டு சூர்யா ரசிகர்கள் தொந்தரவு செய்து வருகின்றனர், ஆனால் படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வந்த பாடில்லை.

இந்நிலையில் தற்போது NGK குறித்து தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த டீவீட்டில் சொன்ன நேரத்தில் அப்டேட் விடாததற்கு மன்னித்து விடுங்கள். நிச்சயம் ரிலீஸ் நேரத்தில் ஜமாய்த்து விடலாம் என கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில் இதோடு பட ரிலீஸ் வரை எந்த அப்டேட்டும் கேட்காதீர்கள் என சொல்லாமல் சொல்லியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 37 படம் குறித்து அப்டேட் எல்லாம் கேட்காமலே வருகிறது. ஆனால் NGK அப்டேட் மட்டும் கேட்டும் வர மாட்டிக்கிறது என கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் இனி நீங்க அப்டேட் கொடுத்தா கொடுங்க, கொடுக்கலா போங்க நாங்க சூர்யா 37 படத்தை பார்த்துட்டு போயிட்டே இருக்கோம் எனவும் கூறியுள்ளார்.