New Swine Flu Virus in China
New Swine Flu Virus in China

கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவடையாத நிலையில் சீனாவில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் உருவாக்கியுள்ளது.

New Swine Flu Virus in China : கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்கத்திற்கு இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா முழுவதும் 6 லட்சம் பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 86 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கம் எப்போது முடியும் என மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவில் உயிரைக் கொல்லும் கொடிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பில் பக்காவா ஒர்க் அவுட் ஆன அஜித்தின் ஐடியா.. நன்றி தெரிவித்த கர்நாடக துணை முதல்வர்!

G4 EA H1N1 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது விரைவாக மனிதர்களுக்கு பரவும். உயிரைக் கொல்லும் அளவிற்கு கிடுகிடுவென தங்களது அறிவை பெருக்கிக் கொள்ளும் என்பதை அறிந்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தோன்றிய H1N1 என்ற வைரசின் மரபணு ரீதியிலான புதிய வைரஸ் தான் இது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரசால் சீனாவில் ஒரு சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கொரானாவின் கோரத்தாண்டவமே இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரசால் உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

https://twitter.com/prathamyadav_/status/1277858857230819328?s=19
https://twitter.com/MSelvaitsme1/status/1277858689274109953?s=19
https://twitter.com/karmahitback/status/1277858394209054720?s=19