தொழில் முதலீட்டாளர்களுக்கு அரசு முழு ஆதரவு கொடுக்கும் - முதல்வர் நம்பிக்கை பேச்சு.!! | TN Govt

New Investment Details in TamilNadu : தமிழகத்தின் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த கொரானா வைரஸ் தொற்று காலத்திலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை திறம்பட செயலாற்றி வருகிறது.

New Investment Details in TamilNadu

மேலும் தொடர்ந்து முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் இந்த தொழில் வளர தமிழகம் என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் 18 தொழில் நிறுவனங்களுடன் 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் 24,458 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 54,218 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு எப்போதும் முழு ஆதரவு அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.