இருபது வருஷமா டான்ஸ் ஆடுற என அஜித்தை கிண்டல் அடித்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.

Nelson DhilipKumar Troll Ajith : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து நேற்று செகண்ட் சிங்கிள் டிராக் பாடல் வெளியானது. இந்த பாடலுக்கான ப்ரமோ வீடியோ ஒன்றில் நெல்சன் திலீப் குமார் டான்ஸ் ஆட தெரியாத கிங்ஸ்லியைப் பார்த்து இருபது வருஷமா டான்ஸ் ஆடுற, என் ஆடுற என திட்டுவது போல உள்ளது.

ஆனால் நெட்டிசன்கள் நெல்சன் மறைமுகமாக அஜித்தை விமர்சித்துள்ளார் எனக் கூறி வருகின்றனர். கிங்ஸ்லியின் நடனம் ஆலுமா டோலுமா டான்ஸ் போல இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.