விமர்சனங்களால் நொந்து போயுள்ளார் இயக்குனர் நெல்சன்.

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இயக்குனராக தடம் பதித்தவர் இயக்குனர் நெல்சன். இந்தப் படங்களைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது.

விமர்சனங்களால் நொந்து போன நெல்சன்.. விருது விழாவில் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க

யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்த படம் பெரும் சறுக்கத்தை சந்தித்தது. இதனால் நெட்டிசன்கள் பலரும் நெல்சன் கண்டமேனிக்கு ட்ரோல் செய்து வந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதும் நெல்சனை வசை பாடியவர்கள் பலர் உண்டு.

இப்படியான நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது பூஜா ஹெக்டே நெல்சனை டான்ஸ் ஆட மேடைக்கு அழைக்க அவர் நான் ஏற்கனவே வசமா மாட்டிகிட்டு இருக்கேன். என்னை விட்டுடுங்க நான் கீழ போய் அமைதியா உட்கார்ந்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.

விமர்சனங்களால் நொந்து போன நெல்சன்.. விருது விழாவில் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க

நெல்சன் நிச்சயம் அடுத்த படம் வெற்றிப்படமாக கொடுப்பார் என பலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.