Nazriya Nassim : தல 59 படத்தில் நஸ்ரியாவின் கேரக்டர் என்ன என்பதை நஸ்ரியாவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தை அடுத்து அஜித் போனி கபூர் இயக்கத்தில் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள தல 59 படத்தில் நடிக்க உள்ளார்.
பிங்க் ரிமேக்காக உருவாக உள்ள இந்த படத்தில் நஸ்ரியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன், அடங்காதவன், அசாராதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் தற்போது நஸ்ரியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தில் தன்னுடைய பெயர் என்ன என்பதை அறிவித்துள்ளார்.
இதோ அந்த ட்வீட் :
Proudly presenting you the Character of mine in #Thala59 #Swetha #NazriyaAsSwetha ???? ???? ♥️ ???? pic.twitter.com/MoNeSrjYzx
— Nazriya Nazim (@Nazriya4U_) December 26, 2018
ஆனால் இது நஸ்ரியாவின் உண்மையான ட்விட்டர் கணக்கா? என்பது உறுதியாக தெரியாததால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.