காக்கிச்சட்டையில் கம்பீரமாய் நயன்தாரா: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

Web Ads

கலெக்டராக நடித்த நயன், தற்போது காக்கிச்சட்டையில் கடமையாற்ற வருகிறார். இது குறித்த தகவல்கள் காண்போம்..

தமிழில் நயன்தாரா கடைசியாக நடித்த படம் இறைவன். பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான். பின்னர், ஓடிடியில் தனது உமன் சென்ட்ரிக் படங்களை வெளியிட்டு வருகிறார். அன்னபூரணி மற்றும் டெஸ்ட் படங்கள் ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களை கவரவில்லை.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

நிகழ்காலம் மற்றும் பீரியட் போர்ஷன் என திரைக்கதை உள்ளதாக கூறுகின்றனர். அரண்மனை 4 திரைப்படம் தமன்னாவை வைத்து எடுத்து 100 கோடி வசூல் செய்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படமும் எதிர்பார்க்கப்படுகிறது.

பில்லா படத்தில் டூபீஸ் உடையில் ஜொலித்த நயன்தாரா ஜவான் படத்தில் போலீஸாக நடித்தாலும் காக்கிச்சட்டை அணியாமல் நடித்திருந்தார். ஆனால், முதன்முறையாக ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மன் கதாபாத்திரத்தை தாண்டி போலீஸ் கதாபாத்திரத்திலும் நயன்தாரா நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் காக்கிச்சட்டை அணிந்து கண்டிப்பாக நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கம்பீரமான ஒரு தோற்றத்துடன் வந்து நிற்கும் திறமையானவர் நயன்தாரா. அறம் படத்தில் கலெக்டராக வந்து கலக்கியிருப்பார். அடுத்ததாக காக்கிச்சட்டையில் எப்படி வரப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

nayanthara to police acting in mookuthi amman 2 movie
nayanthara to police acting in mookuthi amman 2 movie