இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கும் நயன்தாராவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த பிறகு இரு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் தந்தையர் ஆன நயன்-விக்கி தம்பதியினர் அக்குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்ற பெயரை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு வரும் விக்னேஷ் சிவன் அவர்கள் தற்போது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு கொஞ்சி விளையாடும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “என் உயிர்கள்… என் அன்பானவர்களுடன் ஞாயிறு சிறப்பாக போனது. எளிமையான தருணங்கள்” எனக் குறிப்பிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.