National Awards for Suriya

நடிகர் சூர்யா அடுத்தடுத்து தேசிய விருதுகளை வெல்லப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

National Awards for Suriya : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப் விருதுகள் போன்றவற்றிற்கான போட்டியில் கடைசி வரை போராடியது.

இதனால் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு அடுத்து தேசியவிருது நிச்சயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைபபடத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் விருதுகளை அள்ளும் என எதிர்பார்க்கலாம். இதனால் நடிகர் சூர்யாவுக்கு அடுத்தடுத்து தேசிய விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.