நடிகை நமிதாவின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது.

2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை நமிதா. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார் பிறகு உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இப்படியான நிலையில் நமிதா 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன அதுவும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததை நமீதா தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தனது இரட்டை குழந்தைகளுக்கு அற்புதமான பெயர்களை வைத்த நமிதா!!… என்ன தெரியுமா? அழகான புகைப்படங்கள் வைரல்!.

இந்த நிலையில் நமீதா தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார். இதில் அவரது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். நமீதாவின் குழந்தைகளுக்கு ’கிருஷ்ணா ஆதித்யா’ மற்றும் ’கியான் ராஜ்’ ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நமீதா தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தனது இரட்டை குழந்தைகளுக்கு அற்புதமான பெயர்களை வைத்த நமிதா!!… என்ன தெரியுமா? அழகான புகைப்படங்கள் வைரல்!.

அதில் அவர், ‘கிருஷ்ணா ஆதித்யா’ மற்றும் ‘கியான் ராஜ்’ !! இரண்டும் என்னுடைய அழகான அற்புதங்கள். எனக்கு கிருஷ்ணரால் பரிசளிக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த பரிசு! அதனால், என் குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் பெயரை வைக்க முடிவு செய்தேன். இந்த பெயரிடும் விழா எனது சொந்த ஊரான சூரத்தில் நெருக்கமான மற்றும் என் அன்புக்குரியவர்கள் மத்தியில் சிறப்பாக நடந்தது. உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி! என நமீதா தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டு இருக்கும் இந்த அழகான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.