சத்தமில்லாமல் நாய் சேகர் ரிட்டன்ஸ் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Naai Sekhar Returns Motion Poster : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் படக்குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனையடுத்து பல வருடங்களாக படத்தில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். முதலில் நாய் சேகர் என டைட்டில் வைப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பிறகு டைட்டில் பிரச்சனை ஏற்பட்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் என மாற்றப்பட்டது. ‌‌

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.