வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி மன்னனாக வளம் வருபவர் தான் வைகை புயல் வடிவேலு. இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்டரி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வரும் இவர் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருக்கிறார். இதில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காமெடி மன்னனின் அசத்தலான கிளிக்ஸ்!!… நாய் சேகர் ரிட்டன்ஸ் எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோஸ் வைரல்!.

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியிட படகுழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காமெடி மன்னனின் அசத்தலான கிளிக்ஸ்!!… நாய் சேகர் ரிட்டன்ஸ் எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோஸ் வைரல்!.

மேலும் இப்படத்திற்கான டீசர் அல்லது ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரெடின் கிங்ஸ்லி மற்றும் சிவாங்கியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் வடிவேலுவின் இந்த புகைப்படங்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது.

காமெடி மன்னனின் அசத்தலான கிளிக்ஸ்!!… நாய் சேகர் ரிட்டன்ஸ் எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோஸ் வைரல்!.
காமெடி மன்னனின் அசத்தலான கிளிக்ஸ்!!… நாய் சேகர் ரிட்டன்ஸ் எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோஸ் வைரல்!.