Murugadoss Clarification On Thalapathy 65
Murugadoss Clarification On Thalapathy 65

தளபதி 65 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு நபர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முருகதாஸ்.

Murugadoss Clarification On Thalapathy 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் அவர்களும் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார்.

மேலும் இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என தகவல் பரவி வந்தது. ஆனால் துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு விஜய் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மறுத்து விட்டார் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ். தளபதி 65 திரைப்படம் நிச்சயமாக துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சக்சஸ் பார்ட்டியில் தளபதி விஜய் செய்த வேலை – முதல் முறையாக உண்மையை உடைத்த வில்லன் வித்யூ ஜமால்

மேலும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் டைட்டிலை தர மறுத்ததாக வெளியான தகவலும் உண்மையில்லை என கூறியுள்ளார்.

எனக்கு ஒரே கதைக்குள் மீண்டும் மீண்டும் படத்தை இயக்க விருப்பம் இல்லை. ஆகையால் இரண்டாம் படத்தை இயக்குவதில் தற்போது எனக்கு ஈடுபாடில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரே கதையின் தொடர்ச்சியாக படத்தை இயக்கினால் பெரிய ஓப்பனிங் கிடைக்காது. வெவ்வேறு கதை களத்தில் படத்தை இயக்கினால் தான் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதன் மூலம் தளபதி 65 திரைப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என வெளியான வதந்திக்கு ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளார்.