Mugen Rao Character Poster in Velan

அண்ணாத்த ஸ்டைலில் கால்மேல் கால்போட்டு முகேன் ராவ் அமர்ந்திருக்கும் வேலன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Mugen Rao Character Poster in Velan : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் முகேன் ராவ்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் வேலன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கவின் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபு, சூரி, தம்பி ராமையா, லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். ‌‌

எங்கள் நிலையில் தற்போது இந்தப் படத்தில் இருந்து முகேன் ராவ் கேரக்டர் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. கால்மேல் கால்போட்டு அண்ணாத்த ரஜினிகாந்த் போஸ் கொடுத்துள்ளார் முகேன் ராவ். இதனை முகேன் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.