பிக் பாஸ் சீசன் 5-ல் மூத்த நடிகர் ஒருவர் பங்கேற்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ms Baskar in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

வழக்கம் போல இந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் எனவும் அவர் அரசியலில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளும் சீனியர் நடிகர்? வெளியான சூப்பர் தகவல் - யார் அவர் தெரியுமா??

மேலும் எப்போதும் போல இந்த சீசனில் யார் யார் பங்கேற்கலாம் என்ற கெஸ்ஸிங் லிஸ்ட்டும் வெளிவந்தபடி உள்ளது. அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், மோகன் வைத்யா ஆகியோர் சீனியர் நடிகர்களாக பங்கேற்றனர். அவர்களை போல இந்த சீசனில் சீனியர் நடிகராக எம் எஸ் பாஸ்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.