தனுஷ் உடனான காதல் உண்மையா?: மிருணாள் தாக்கூர் விளக்கம்..

Web Ads

தமிழ்த்திரை உலகில் உச்சத்தில் இருக்கும் பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில்தான், இவருக்கும் இவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து கிடைத்தது.

இந்நிலையில், தனுஷ் – மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவி வருகின்றன. மிருணாள் தாக்கூர் பார்ட்டியில் தனுஷுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் தனுஷின் காதல் பாடல்களுக்கு அவர் வைஃப் செய்யும் வீடியோக்கள் போன்றவை வெளியாகி வைரலாகி வந்தன.

மேலும், மிருணாள் தாக்கூரின் பிறந்தநாள் விழாவிலும் தனுஷ் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, தனுஷ் அடிக்கடி மிருணாளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், டேட்டிங் வதந்திகள் பரவத் தொடங்கின.

இதற்கு தற்போது மிருணாள் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். ‘தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. சமீபத்தில் எங்கள் இருவருக்கும் இடையேயான வதந்திகள் பரவியது எனக்குத் தெரியும். அதைப் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது.

‘சன் ஆஃப் சர்தார் 2′ நிகழ்வில் தனுஷ் கலந்துகொண்டது குறித்து, தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் நல்ல நட்பு. அஜய் தேவ்கன்தான் தனுஷை அந்த நிகழ்விற்கு அழைத்தார். அந்த நிகழ்வில் கலந்துகொண்டதற்காக எங்களை இப்படி இணைத்துப் பேசுகிறார்கள்’ என்றார் மிருணால். இவரது விளக்கம் இணையவெளியில் நம்பப்படுமா? இனி, விமர்சனங்கள் ஓயுமா?

mrunal thakur breaks silence about dating rumors with dhanush
mrunal thakur breaks silence about dating rumors with dhanush