ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் குறித்து அப்டேட்ஸ்..

Web Ads

இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் ராஜா என அடுத்தடுத்த இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க தனுஷ் தொடர்ந்து கமிட்டாகி வருகின்றார். இதில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் பார்ப்போம்..

சில வருடங்களுக்கு முன்பே ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக கமிட்டானார். இடையில் விஜய்யின் கடைசிப் பட வாய்ப்பு கிடைத்ததால், தனுஷ் ஹெச்.வினோத்தை அப்படத்தை இயக்கிவிட்டு வருமாறு அனுமதி கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து ஹெச்.வினோத் தற்போது ‘ஜனநாயகன்’ பட வேலைகளை செய்து வருகின்றார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ ரிலீஸாகி விடும்.

அதைத்தொடர்ந்து ஹெச்.வினோத், தனுஷ் நடிக்கும் பட வேலைகளை துவங்க இருக்கின்றார். ஆனால், தனுஷ் ரொம்ப பிசியாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதால் ஹெச்.வினோத் இயக்கத்தில் எப்போது நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வருகின்றது.

அடுத்தாண்டு மார்ச் மாதம் ஹெச்.வினோத் -தனுஷ் படம் துவங்கவுள்ளது. அதற்குள், தனுஷ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தான் நடித்து வரும் D54 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுவார்.

மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்த D55 படப்பிடிப்பிலும் தனுஷ் இணைய இருக்கின்றார். இதற்கிடையில் தான் ஹெச்.வினோத் படத்தையும் துவங்க தனுஷ் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, இப்படத்தில் கமிட்டாகி சில வருடங்கள் ஆகிவிட்டதால், ஹெச்.வினோத் படத்திற்கு தனுஷ் முன்னுரிமை கொடுத்திருப்பதாக தெரிகின்றது.

தற்போது அனைவரின் பார்வையும் ‘ஜனநாயகன்’ படத்தின் மீது தான் இருக்கின்றது. இந்த சமயத்தில் ஹெச்.வினோத் -தனுஷ் படத்தின் அறிவிப்பு வந்தால் சரியாக இருக்காது என்பதால், தற்போதைக்கு படக்குழு அறிவிப்பை வெளியிட மாட்டார்கள்.

மேலும், ஹெச்.வினோத் இயக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளர் எனவும், இப்படம் ‘சதுரங்க வேட்டை’ பாணியில் யூகிக்க முடியாத மாறுபட்ட திரைக்கதையில் உருவாகும் படம் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

actor dhanush and director h vinoth movie update
actor dhanush and director h vinoth movie update