மணிமேகலையை கலாய்க்கிறேன் என்ற பெயரில் சீரியல் நடிகர் யோகேஷ் அம்மா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Mr and Mrs Chinathirai Promo Controversy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் நடுவராக பங்கேற்க அர்ச்சனாவும் மகாபாவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

விநாயகர் எடுத்த 12 அவதாரங்கள்.!

உடல்நலக் குறைபாடு காரணமாக அர்ச்சனா தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மணிமேகலை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் சீரியல் நடிகர் யோகேஷ் அம்மாவும் மைனா நந்தினியின் மாமியாரான பின்னணி மணிமேகலை கலாய்க்கிறேன் என்ற பெயரில் உருவ கேலி செய்துள்ளார். இதனை மணிமேகலை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் இந்த புரோமோ விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தலைவி படம் Election-க்கு முன்னாடி வந்து இருக்கணும் – Director K.Bhagyaraj Speech..! | Thalaivii

பார்ப்பதற்கு யோகேஷ் அம்மா ஒல்லியாக இருக்கிறார். அப்படி இருக்கையில் அவர் மணிமேகலையின் உருவத்தை கேலி செய்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஜய் டிவி விமர்சனம் செய்வது மட்டுமல்லாமல் மணிமேகலைக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

ஸ்கிரிப்டட் ஷோவாக இருந்தாலும் இந்த உருவ கேலி காமெடி பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.