கதிர் மற்றும் திவ்யா பாரதி இணைந்து நடித்து வரும் படத்திற்கு விஜய் நடிப்பில் வெளியான “லவ் டுடே” என்ற படத்தின் டைட்டிலை இப்படத்திற்கு வைத்துள்ளதாக தகவல் வெளிவந்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டில் வெளியான “இஷ்க்” திரைப்படம் குறைந்த பட்ஜெட் செலவில் எடுத்திருந்தாலும் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த ஏ படம் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது.

இதில் பரியேறும் பெருமாள் ஹீரோ கதிர் மற்றும் பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகமான திவ்ய பாரதி இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘ஜீரோ’ படத்தை இயக்கிய ஷிவ்மோஹா இயக்கி வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தலைப்பு குறித்த சுவாரஸ்சிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் டைட்டில் தான் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. காதலுக்கு புது அர்த்தத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டைட்டில் மீண்டும் வரப்போவது எண்ணி ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.