பிரபு, சூர்யா உயிருக்கு வந்த ஆபத்து, நந்தினி மீது விழுந்த பழி, வெளியான மூன்று முடிச்சு, மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் பிரபு ஆதிரைக்கு போன் போட்டவுடன் சத்தம் கேட்டு ரவுடிகள் கண்டுபிடித்து விடுகின்றனர். சூர்யா எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் என்று கேசவனிடம் சொல்ல, கேசவன் ராஜா தம்பியோட பேத்தியை மட்டும் தான் கொல்லணும்னு நெனச்சேன் அதுக்குள்ள நீயும் இன்னொருத்தியும் வந்து சிக்கிட்டீங்க என்று சொல்ல, அவசரப்பட்டு பேசாதீங்க இன்னும் ஆட்டமே ஆரம்பிக்கல என்று சொல்லி சூர்யா ஒரு வாய் சரக்கு குடித்துவிட்டு ஓடுகிறார். அருணாச்சலம் சூர்யாவிற்கு ஃபோன் போட எடுக்காமல் இருக்க கடுப்பாகிறார். சூர்யா ரவுடிகளிடம் சண்டை போட குடும்பத்தினர் இவர்களைத் தேடி பதற்றத்தில் இருக்கின்றனர். சூர்யா கேசவன் ஆட்களை அடித்துவிட கேசவன் சூர்யாவை தலையில் அடித்து விட மயங்கி விழுந்து விடுகிறார். கேசவன் சூர்யாவின் முகத்தில் காலை வைத்து மிதித்து குண்டத்து காளியம்மன் ஆல கூட என் கிட்ட இருந்து உன்ன காப்பாத்த முடியாது என்று சொல்லுகிறார்.
உன்ன மட்டும் இல்ல ராஜா தம்பி பேத்தியும் அவ கூட இருக்கிறவளையும் காப்பாத்த முடியாது. கொஞ்ச நேரத்துல இந்த ஊரையே சுடுகாடாக்கப் போறேன் நாளைல இருந்து இந்த ஊர் என்னோட கண்ட்ரோலா இருக்கும் பழையபடி இந்த பாக்டரியை துறப்பேன். இதையெல்லாம் பார்க்க நாளைக்கு உயிரோட இருக்க மாட்ட என்ற சொல்லிவிட்டு ஆட்களை ஆதிரையும் குழந்தையும் தேட அனுப்புகின்றனர். உடனே ஆதிரை பிரபுவுக்கு வாய்ஸ் நோட் அனுப்ப கேசவன் ஆள் ஆதிரையை கண்டுபிடித்து இழுத்து வருகிறார். கேசவன் ஆதிரையை அறைந்து போனை புடுங்கி பார்த்து விடுகிறார். மறுபக்கம் சமபந்தி ஏற்பாடுகள் நடக்க கேசவன் ஆட்கள் பாயாசம் ரெடியா என்று கேட்க சர்க்கரை போட்டு கலக்கினால் ரெடி என்று சொல்ல அதை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க உள்ள போய் வேலையை பாருங்க என்று சொல்லுகின்றனர்.
உடனே கேசவன் ஆட்கள் குழம்பில் விஷத்தை கலந்து விடுகின்றனர். நந்தினி குண்டத்து காளியம்மனிடம் வேண்டிக் கொள்ள, கேசவன் நெருப்பு வளையம் ஒன்றை உருவாக்கி அதில் குழந்தையை போட வேண்டும் என்று சொல்ல ஆதிரை உன் பையன் பண்ண தப்பு குழந்தையை பழிவாங்கணும்னு நினைக்காத விட்டுவிடு என்று சொல்ல கேசவன் அது நடக்காது என்று சொல்லிவிட்டு ஆதிரையிடம் இருந்து குழந்தையை பிரித்து நெருப்பு வளையத்துக்குள் தள்ளி விடுகிறார். துவா ஒரு பக்கம் கதறி அழ ஆதிரை சூர்யா அண்ணா எழுந்திடுங்க குழந்தையை காப்பாத்துங்க என்று கத்துகிறார். உடனே மயக்கத்தில் சூர்யா தண்ணீர் என கேட்க கேசவன் விஷ சாராயத்தை கொடுக்க சொல்ல சூர்யா பக்கத்தில் பாட்டிலை வைத்த ஆதிரை அதை கொடுக்காதீங்க என்று சொல்லுகிறார். ஆதிரை அதில் விஷம் இருக்கு குடிக்காதிங்க என்று சொல்ல, சூர்யா மயக்கியத்தில் எழுந்து குடித்து விடுகிறார். துவாவை பார்த்துவிட்டு போதையில் தள்ளாடி சூர்யா எழுந்து நிற்கிறார்.
பிரபு ஆதிரை அனுப்பிய வாய்ஸ் நோட்டை பார்த்துவிட்டு பதறி அடித்து ஓடி வருகிறார். மறுபக்கம் மக்கள் கூட்டம் சமபந்தி விருந்துக்கு ஓடி வந்து உட்காருகின்றனர். பிரபு யாரும் சாப்பிடாதீங்க என்று கத்த கேசவன் ஆல் ஆமாடா நாங்க தான் கலந்தோம் உன்னால இல்ல உள்ள உட்கார்ந்திருக்க சாமியால கூட தடுக்க முடியாது என்று சொல்லுகிறார். சூர்யா ஒரு பக்கம் ரவுடிகளிடம் சண்டை போட, பிரபு சமபந்தி நடக்கும் இடத்தில் இருக்கும் ரவுடிகளை வெளுத்து வாங்குகிறார். சூர்யா நெருப்புக்குள் சென்று துவாவை தூக்கிவிட்டு உனக்கு எதுவும் ஆகாது என்று சொல்லிவிட்டு ஆதிரையிடம் தூக்கி போடுகிறார். மறுபக்கம் பிரபுவும் ரவுடிகளை அடித்து விரட்டி விடுகிறார். யாரும் சாப்பிடாதீங்க என்று சொல்லியும் சாப்பாடு பரிமாற, அனைவரிடமும் சாப்பிட வேண்டாம் என கெஞ்சுகிறார்.
நடந்த விஷயங்கள் அனைத்தையும் சமையல்காரரிடம் சொல்லி கெஞ்சி காலில் விழுந்து சாப்பிட வேண்டாம் என சொல்லுகிறார். சூர்யா நெருப்பிலிருந்து வர முடியாமல் தவிக்க, பிரபு சொல்வதையெல்லாம் கேட்காமல் சமையல்காரர் வெளியில் போக சொல்ல பத்து நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க நான் நிரூபிக்கிறேன் என்று சொல்லி பிரபு விஷம் கலந்த சாப்பாட்டை ஆதிரையுடன் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைத்து சாப்பிட்டு விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி இந்த ஊரு மக்களை காப்பாற்றின அந்த ரெண்டு பேருக்க இந்த தண்டனை எங்க ரெண்டு பேரு தாளிக்க நீ சோதனை கொடுக்கிற என்று சாமியிடம் வேண்ட தீச்சட்டி கீழே விழுந்து விடுகிறது அதில் நகைகள் இருக்க இந்த பொண்ணு வச்சிருந்த தீச்சட்டி இருந்து தான் நகை விழுந்து இருக்கு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றன.
சூர்யா மற்றும் பிரபுவிற்கு ட்ரீட்மென்ட் நடந்து கொண்டு இருக்கா சுந்தரவல்லி இவ அங்கதான வரணும் அவளுக்கு கச்சேரி இருக்கு என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
