சீதா கொடுத்த ஷாக், ரோகிணியை வைத்து ஸ்ருதி அப்பா போடும் திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சீதா ஷாக் கொடுக்க, ரோகினி வைத்து ஸ்ருதி அப்பா திட்டம் போட்டு உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதாவை சந்தித்து எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் என்று கேட்க சீதா கவர்மெண்ட் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்ல ஒரே பையன் இருக்கிற மாதிரி வேணுமா இல்ல ஃபேமிலியா வேணுமா என்று கேட்க சீதா அருணை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு பையன் இருக்கிற வீடா இருந்தா ஓகே என்று சொல்ல முத்து நான் இதே மாதிரியே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே மீனா போன் பண்ண சீதா முத்து சொன்ன விஷயங்களை சொல்லுகிறார் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வேலையை செய்ய முடியல அம்மாகிட்ட ரிஜிஸ்டர் மேரேஜ் விஷயத்தை சொல்லிடலாமா என்று கேட்க எதுவும் வேண்டாம் இப்ப சொன்னா பிரச்சனை ஆயிடும் அமைதியா இரு சொல்லிக்கலாமென்று சொல்லிவிடுகிறார்.
மறுபக்கம் ஸ்ருதி அம்மா அப்பா இருவரும் ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி நடந்து கொள்வதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். உன் பொண்ணு சரியா இருந்திருந்தா கூட்டிட்டு வந்திருக்கலாம் ஆனா அவளும் நம்ம சொல் பேச்சைக் கேட்க மாட்டேங்கிறா என்று பேசிக்கொண்டிருக்க ரோகிணி வருகிறார். ஸ்ருதி அம்மா வரவேற்க ரூமில் அழைத்துச் சென்று பேசுகிறார் என்ன விஷயம் என்று கேட்க எனக்கு ஒரு ரெண்டு லட்சம் தேவைப்படுது ஆன்ட்டி கிடைக்குமா என்று சொல்ல ரெண்டு லட்சமா இருமா அவர்கிட்ட பேசிட்டு வரேன் என்று வெளியில் வருகிறார்.
உடனே சுருதியின் அப்பா நான் என்ன பேங்க் நடந்துகிட்டு இருக்க அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்ல ஸ்ருதியின் அம்மா ரோகினி இடம் பணம் கொடுக்க முடியாது என்று சொல்லப் போக திடீரென ஸ்ருதியின் அப்பா நீ இவ்வளவு நாளா நம்ம பொண்ணையும் மாப்பிள்ளையும் இங்க கூட்டிட்டு வர்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க ஆனா இப்போ அது நடக்கும் என்று சொல்லிவிட்டு ரோகினிக்கு பணத்தை கொடுக்க சொல்லுகிறார் என்ன சொல்றீங்க இந்த பொண்ணுக்கு பணத்தை கொடுத்தா எப்படி நடக்கும் என்று சொல்ல அதற்கு ஸ்ருதியின் அப்பா இந்த பொண்ணு பணத்துக்காக எவ்வளவு பொய் வேணாலும் சொல்லுவா அந்த வீட்ல நம்மளுக்கு ஒரு ஆள் தேவை அதனால கொடு என்று சொல்ல ரோகினி இடம் சென்று அக்கவுண்டில் அனுப்புறேன் என்று சொன்னவுடன் ரோகினி நன்றி சொல்லிவிட்டு வெளியில் வர ஸ்ருதியின் அப்பாவிடம் நன்றி சொல்லுகிறார். எங்களுக்கு ஏதாவது ஒரு உதவினா நீ பண்ணாமலேயே போயிடுவே என்று சொல்ல கண்டிப்பா செய்ற அங்கிள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
முத்து மீனாவிடம் வந்து நீ சீதாவுக்கு எப்படிப்பட்ட மாப்பிள வேணும்னு கேட்க சொன்னேன்ல சீதாவே சொல்லிட்டா என்று சொல்லுகிறார். மீனா சீதா என்ன சொன்னா என்று கேட்க முத்து கேட்ட கேள்வியையும் சீதா சொன்ன பதிலையும் மீனாவிடம் சொல்ல அதற்கு மீனா கண்டிப்பா அருணை மனசுல வச்சு தான் இந்த பதிலை சொல்லி இருப்பா என்று மீனா சொல்ல முத்து அப்படி எல்லாம் இருக்காது ஊர்ல இவன் மட்டும் தான் கவர்மெண்ட் வேலை பார்க்கிறானா இவன் மட்டும் தான் ஒரே பையனா எனக்கு இது தெரிஞ்சாகணும் சீதா அப்படித்தான் மனசுல சொல்லி இருந்தா நான் எதுக்கு தேடணும் எனக்கு இது ஒரு முடிவு தெரிஞ்சாகணும் என்று சீதாவை சந்திக்க முத்தமும் மீனாவும் வருகின்றனர்.
சத்யாவிடம் சந்திரா பேசிக் கொண்டிருக்க சீதா வருகிறார் ஏன் லேட் என்று கேட்க வேலை அதிகமா இருந்துச்சு என்று சொல்லுகிறார் வேற யாரையும் பார்க்க போகவில்லை என்று சொல்ல அருணை பாக்க போலல்ல என்று நேரடியாக கேளு என்று சொல்லுகிறார். நீ வேணா மாமாவை கூட கேளு ஹாஸ்பிடல் தான் இருந்தேன் என்று சொல்ல அவர் எதுக்கு வந்தாரு என்று கேட்கிறார் எனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு கேட்க வந்தாரு நானும் சொல்லிட்டேன் என்று சொல்ல என்ன சொன்ன என்று கேட்க நீ மாமாவையே கேளு எனக்கு தலை வலிக்குது டீ கொடு என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறார். சத்தியா என்ன கூட மாமா மாப்பிள்ளை பாக்குற விஷயமா செங்கல்பட்டுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா என பேசிக்கொண்டு இருக்கின்றனர். முத்து வந்து என்ன கேட்கிறார்? அதற்கு சீதாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
