நந்தினியை மிரட்டிய மாதவி,சுந்தரவல்லி கொடுத்த ஷாக்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி எண்ணெய் தேய்த்து விடுகிறார். உடனே மாதவியின் கணவர் இதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது இல்லை என்று கேட்கிறார். உடனே சுரேகா மாமா தான் கெஞ்சுறாரே நீயா இதை பண்ணக்கூடாது என்று சொல்ல இதோ பண்றேனே உட்காருங்க என்று மாதவி உட்கார வைக்கிறார். பிறகு மாதவி அவருக்கு எண்ணெய் தேய்த்து தலையில் மசாஜ் செய்கிறார். நந்தினி சூர்யாவிற்கு செய்வதெல்லாம் மாதவி அசோகனுக்கு செய்கிறார். உடனே சுரேகா ஒரு செங்கலை எடுத்து வந்து கொடுக்க மாமாக்கு நல்லா தேச்சு விடுக்கா என்று சொல்ல அவரும் செங்கலை வைத்து உடம்பு முழுக்க தேய்த்து தலையிலும் தேய்த்து விடுகிறார் இதனால் அசோகன் தெரிந்து ஓட அனைவரும் சிரிக்கின்றனர்.
பிறகு பூஜை செய்ய அனைவரும் பூஜை ரூமுக்கு வர நந்தினி துணிகளுக்கு மஞ்சள் வைத்து எடுத்து வைக்கிறார். சூர்யா இதையெல்லாம் பார்த்து என்ன டேட் புதுசா இருக்கு என்று கேட்க உனக்கு எல்லாமே புதுசு தாண்டா போன வருஷம் சாமி கும்பிட வந்தியா இந்த வருஷம் வந்திருக்கல்ல என்று சொல்ல கரெக்ட் என்று சொல்கிறார். பிறகு அம்மாச்சி எல்லா பலகாரத்துலையோ ரெண்டு ரெண்டு எடுத்து இலையில் வெய்யுமா என்று சொல்ல அவரும் வைக்கிறார். இதையெல்லாம் சுரேகாவும் மாதவியும் பார்த்து இவ பூஜை ரூம் வெறிக்கும் வந்துட்டா என்று சொல்ல எல்லாத்துக்கும் தகப்பனார் சாமி தான் காரணம் என்று மாதவி சொல்லுகிறார். எல்லா ரெடி ஆயிடுச்சு சாமி கும்பிடலாம் ஐயா என்று நந்தினி சொல்ல அருணாச்சலம் சுந்தரவல்லி வரலையா என்று மாதவிடாய் கேட்க அதெல்லாம் கூப்பிட்டாச்சு அவங்க வரல என்று சொன்னவுடன் அருணாச்சலம் சுந்தரவல்லி கூப்பிட சொல்கிறார்.
சுந்தரவல்லி ரூமுக்கு வந்து கதவை தட்ட வர அவரை வெளியே வருகிறார் என்ன என்ன சமாதானப்படுத்த வந்திருக்கீங்களா என்று கேட்க, அருணாச்சலம் சாமி கும்பிட வா என்று கூப்பிட எப்ப பார்த்தாலும் அட்வைஸ் பண்ணாதீங்க கிளம்புங்க என்று சொல்லுகிறார். எப்பவுமே வருஷ வருஷம் நீ தானே விளக்கு ஏத்தி பூஜை பண்ணுவ வா என்று கூப்பிட, சுந்தரவல்லி இப்பதான் புதுசு புதுசா வந்திருக்காங்களே என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். உடனே சூர்யா அங்கு வந்து ஒன்னும் பிரச்சனை இல்ல டாடி இவங்க வந்து ஏத்துனா தான் விளக்கு எரியுமா என்ன என் வைஃப் டார்லிங் விளக்கேற்றினால் சூப்பரா எரியும் என்று சொல்லி அருணாச்சலத்தை இழுத்து வருகிறார். உடனே மாதவி என்னவெல்லாம் நடக்கட்டுமா ஆனா பூஜை ரூம்ல விளக்கு ஏற்ற உரிமையை விட்டுக் கொடுக்காதீங்க வாங்க என்று அவரை சமாதானப்படுத்தி கூட்டி வருகிறார். சுந்தரவல்லி பூஜை ரூமில் சென்று விளக்கேற்றி பூஜையை செய்கிறார். தீபாரதனையை வெளியே எடுத்து வந்து அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் காட்டிவிட்டு நந்தினியின் குடும்பத்திற்கு காட்டாமல் உள்ளே எடுத்து சென்று விடுகிறார். பிறகு சுந்தரவல்லி இடம் எல்லாருக்கும் உன் கையால டிரஸ் எடுத்துக் கொடு என்று சொல்ல அவரும் புஷ்பா கல்யாணம் வாங்க என்று சொல்லி அவர்களுக்கு கொடுக்கிறார். பிறகு வீட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் துணியை கொடுக்கிறார்.
மீதி துணி எல்லாம் யாருக்கு என்று சுந்தரவல்லி கேட்க எல்லா நந்தினி சிங்காரம் உங்களுக்கு தான் என்று சொல்ல சுந்தரவல்லி பேசாமல் சென்று விடுகிறார் பிறகு சூர்யா நீங்க எடுத்து குடுங்க டாடி என்று சொல்ல அருணாச்சலம் எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் நந்தினி வாங்க மறுக்கிறார். அம்மா திட்டுவாங்க, நாங்க ஒரு ஓரமா ஒதுங்கி நிற்கிறோம் என்று சமாதானப்படுத்தி கொடுக்க சிங்காரம் அம்மாச்சி என அனைவரும் நந்தினியை வாங்கிக சொல்ல நந்தினியும் அவர்களது குடும்பத்தினரும் துணிகளை வாங்கிக் கொள்கின்றனர். உடனே ரூமில் இருந்து பட்டாசுகளை எடுத்து வந்த சூர்யா பட்டாசு வெடிக்கலாம் வாங்க என அனைவரையும் வெளியில் கூட்டி வருகிறார். சூர்யா ஜாலியாக பட்டாசு வெடிக்க அருணாச்சலம் நீங்க மட்டும் ஏன் தனியா நிக்கிறீங்க எல்லாரும் சேர்ந்து விடுங்கள் என்று சொல்ல அம்மாச்சி தல தீபாவளிக்கு இரண்டு பேரும் சேர்ந்து படிச்சா தானே நல்லா இருக்கும் என்று சொல்ல நந்தினி டென்ஷன் ஆகிறார். பிறகு சூர்யா நந்தினியை இழுத்து வந்து நிற்க வைத்து அவர் கையில் ஊதுபத்தியை கொடுக்கிறார்.
பிறகு ஒரு பெரிய சரத்தை உருட்டி , நந்தினி உடன் சேர்ந்து பட்டாசு வைக்கிறார். ஹாப்பி தீபாவளி டேடி என்று அருணாச்சலத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். பிறகு அனைவரும் உள்ளே பலகாரத்தை சாப்பிட உட்காருகின்றனர். நந்தினியும் புஷ்பாவும் அனைவருக்கும் பரிமாற, வீட்ல செய்ற பலகாரம் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு என்று அருணாச்சலம் சொல்ல சுரேகா அதெல்லாம் இப்ப கடையிலேயே செய்றாங்கப்பா என்று சொல்ல எல்லாத்தையும் பொருள் தான் ஆனால் அன்பும் அக்கறையும் வீட்ல செய்யறதுல இருக்கோம் என்று அருணாச்சலம் சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி வேணும்னா புஷ்பா அக்கா போயிட்டு வரட்டும் என்று சொல்ல மாதவி அவள வேலை சொல்ல நீ யாரு என்று கேட்கிறார். சுந்தரவல்லி வீட்டில் செஞ்ச ஸ்வீட்ட சாப்பிடாம வெளியே ஆர்டர் பண்ணி சாப்பிடுறியா என்று அருணாச்சலம் கேட்கிறார். அவங்க எப்பவுமே அப்படித்தான் இருப்பாங்க அவங்க மாறனும்னு நினைக்கிறது தப்பு என்று நந்தினி குடும்பத்தாரிடம் சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.