நடிகர் விஜய் எப்படி பாஜகவுக்கு பி-டீம் ஆவார்?: எச்.ராஜா கேள்வி..
தமிழகத்தில், ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சி தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து, சென்னையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிராக நடவடிக்கையாகும். மக்களாட்சி தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள பாஜக அரசின் இந்த சட்டத்தை இந்த செயற்குழு கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இச்சூழ்நிலையில் விஜய், பாஜகவின் பி- டீமாக செயல்படுவதாக சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலரும் கூறி இருந்தனர். இந்த நிலையில் விஜய், பாஜகவின் பி டீமா? என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, பாஜக அலுவலகத்தில் எச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
‘வருகிற 7 ஆம் தேதி தஞ்சை செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு, கோயில் பணத்தை கொண்ட வரவேற்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிப் பணத்தில் செலவிட வேண்டியது தானே. அடுத்தவர்களின் விருப்பத்திற்கு எதிராக திணிப்பதே பாசிசம். அப்படி என்றால், திமுக மற்றும் கம்யூனிட்ஸ்ட கட்சிகள் தான் பாசிசம் ஆவார்கள்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறும் விஜய் எப்படி பி-டீம் ஆவார். முதலில் சீமானை பாஜகவின் பி டீம் என்றார்கள். தற்போது விஜய்யை கூறுகின்றனா். ஒரு கட்சிக்கு இத்தனை பி டீம் இருப்பார்களா? அப்படி இருந்தால், அது பாஜகவுக்கு தாங்காது.
நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் திமுகவை எதிர்த்ததால், அஜித் தங்கள் கட்சிக்கு கிடைத்து விட மாட்டாரா? என திமுக நினைத்து முயற்சிகள் செய்கிறது’ என கூறியுள்ளார்.
முன்னதாக, தளபதி விஜய் ‘ யார் விமர்சனம் செய்தாலும், தவறான வகையில் விமர்சனம் செய்ய வேண்டாம், மாநாட்டை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வரும்’ எனவும் கூறினார்.
நதிபோல ஓடிக்கொண்டே இருக்கிறார் தளபதி.!