எந்த நடிகையுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை?: கவின் சொன்ன பதில்..
‘ப்ளடி பெக்கர்’ படம் மூலம் மேலும் பரபரப்பாகி விட்டார் நடிகர் கவின். அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வருகின்றது.
ப்ளடி பெக்கர் படத்தை வெறும் 10 கோடி பட்ஜெட்டில் தான் தயாரித்து இருக்கிறார் நெல்சன். தற்போது உலகளவில் 4 நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதால், தயாரிப்பாளராகவும் அவர் செம ஹேப்பியாகி விட்டார். நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இப்படத்தை ஓடிடியில் நல்ல விலைக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இதனால், தியேட்டரில் வசூல் ஆகும் தொகைகள் அனைத்துமே லாபக்கணக்கில்தான் சேரும் எனவும் கோலிவுட் தெரிவிக்கிறது.
இந்நிலையில், படம் இதுவரை அதாவது முதல் நான்கு நாட்களில் ரூபாய் 12 கோடிகள் வரை உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. அப்படியான நிலையில், படம் வசூல் ரீதியாகவே வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், மகிழ்ச்சியடைந்த ஹீரோ கவின் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, கவின் எந்த நடிகையுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘அதுபோல எல்லாம் யாரும் இல்லை. கதைக்கு தேவைப்படுகின்றது என்றால், யாருடன் வேண்டுமானாலும் லிப்லாக் காட்சியில் கட்டாயம் நடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பதில், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கவின் தனது அடுத்த படத்தில் நயன்தாராவோடு நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதுபோன்ற கேள்விக்கு கவின் அளித்துள்ள பதில், இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
முன்னதாக, பிக்பாஸ் சீசனில் பங்கேற்றபோது, லாஸ்லியாவுடன் காதலா? என கேட்கப்பட்டது. அதற்கு, சிறு புன்னகையை பதிலாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.