இரண்டு டீமுக்கும் இடையே வெடித்த கருத்து மோதல், பரபரப்பான பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ..!
பிக் பாஸ் வீட்டில் இன்று பரபரப்பாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் எலிமினேஷன் செய்யாமல் வைல்ட் கார்ட் என்ட்ரி மட்டும் இருந்தது. இது மட்டும் இல்லாமல் இந்த வார எலிமினேஷனுக்கு ஓபன் நாமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆண்கள் அணியினருக்கும் பெண்கள் அணியினருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கிச்சனுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண் போட்டியாளர்கள் சாப்பிட முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
இதனால் பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருக்கிறது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram