Pushpa 2

முத்துவுக்கு தெரிந்த உண்மை,விஜயா கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துக்கு உண்மை தெரிய வர விஜயா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

siragadikka asai serial episode update
siragadikka asai serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா நாங்க காசு பணம் சேர்க்கல மரியாதையா சேர்த்து வைத்திருந்தோம் ஆனால் இப்போ அதுவும் போச்சு உன் மாமியார் பேசுன பேச்சு சாகாம உயிரோடு இருக்கிறதே பெரிய விஷயம் என்று சொல்ல சத்தியா நான் வேணா போயி அவங்க கிட்ட பேசுற என்று சொல்ல என்னடா பேசுவ என்று மீனா சத்யாவை அடிக்கிறார். பிறகு இது எப்ப நடந்தது சிட்டி கூட இருக்கிறப்ப தானே என்று கேட்க ஆமாம் என்று சொல்லி பிறகு இந்த விஷயம் மாமாவுக்கு முன்னாடியே தெரியும் அவரோட போன்ல தான் இந்த வீடியோ இருந்தது என்று அனைத்து உண்மைகளையும் சொல்ல மீனா இவ்வளவு நல்லது பண்ணி இருக்காரு ஆனால் நான் அவரை எவ்வளவு திட்டிருக்க அவர புரிஞ்சுக்காம இருந்துட்டேன் என்று அழுகிறார். அவர் போன் தொலைஞ்ச அப்போ பதறிப் போனாரு எனக்கு அப்போ தெரியல இந்த வீடியோவுக்காக தான் என்று அழுகிறார். ஆனால் தப்பை எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும் என்று சொல்லி அழுகிறார்.

விஜயா நடந்த விஷயங்களை அண்ணாமலையிடம் சொல்ல அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் ரோகினி நல்லவேளை நம்மளோட பிரச்சனை சரி ஆயிடுச்சு இதுக்கு அப்புறம் நம்ம ஃப்ரீயா ஆயிடலாம் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். விஜயாவிடம் நீங்க மத்தியானத்திலிருந்து சாப்பிடல ஏதாவது காபி போடவா என்று கேட்க வேண்டாம் என மறுக்கிறார்.

இந்த அசிங்கத்திலிருந்து நான் எப்படி வெளியே வரப் போறேன்னு தெரியல இதுல காபி வேறயா என்று கேட்கிறார் அண்ணாமலையிடம் கேட்க அவரும் வேண்டாம் என சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து ஒத்து வந்து திருப்பதி சவாரி நல்லா இருந்ததுப்பா நாங்கள் லட்டு என்று கொடுக்காத எதுவும் பேசாமல் இருந்து போய் ஓரமாக நின்று விடுகிறார் மனோஜ் உனக்கு லட்டு புடிக்கும்ல எடுத்துக்கோ என்று சொல்ல யாரும் எதுவும் பேசாமல் இருக்க விஜயா அல்வா வாங்கிட்டு வர வேண்டியதுதானே என்று சொல்லுகிறார். ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கீங்க என்று முத்து கேட்கிறார்.

நீ வீடியோ எதுவும் பாக்கலையா என்று மனோஜ் கேட்க என்கிட்ட தான் போன் இல்லையே நான் எப்படி பார்க்க முடியும் என்று சொல்ல, இத்தனை நாளா நீ எங்களுக்கு குறும்படம் கட்டிக்கிட்டு இருந்த, ஆனா இன்னைக்கு நான் உன் மாமியார் குடும்பத்தை ஷார்ட் பிலிம் காட்டுகிறேன் என்று வீடியோவை காட்ட முத்து அதிர்ச்சி அடைகிறார். உடனே ரோகினி என்ன முத்து உங்களுக்கு முதலிலேயே தெரியுமா என்று கேட்க அண்ணாமலை முத்துவிடம் உங்க அம்மா நிறைய பேசலாம் ஆனா எனக்கு கோவமா வந்துச்சு ஆனா அது எதுக்குமே என்கிட்ட பதில் இல்லை என்று அமைதியாக ரூமுக்கு சென்று விடுகிறார்.

முத்து நான் போய் மீனாவ கூட்டிட்டு வரேன் என்று சொல்ல விஜயா நீ அங்க போ என்ன வேணா பண்ணு ஆனால் அவளை இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வராத என்று சொல்ல அவன் என் பொண்டாட்டி கூட்டிட்டு தான் வருவேன் என்று முத்து சொல்லுகிறார் இது என் வீடு நான் உள்ள விடமாட்டேன் என்று விஜயா சொல்லுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து உயர் அதிகாரி வந்து முகம் நல்லா தானே தெரியுது இந்த பையனை விசாரிச்சு அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வாங்க என்று சொல்ல அவர்களும் சரி என சொல்லுகின்றன.

முத்து மீனாவின் வீட்டுக்கு வர அங்கு என்ன நடக்கிறது? மீனா என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update
siragadikka asai serial episode update