சுரேகா சொன்ன வார்த்தை, கண் கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 27-03-25
நேற்றைய எபிசோடில் நந்தினி சாமி போட்டோ முன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி ரூமில் டென்ஷனாக இருக்கிறார். அந்த நேரம் பார்த்து மாதவியும் சுரேகாவும் வர இவளை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த இவ மூஞ்ச பாத்தா எரிச்சலா இருக்கு போக சொல்லு என்று சொல்ல , சுரேகா சுந்தரவல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க பண்றது எல்லாம் பண்ணிட்டு மன்னிப்பு கேக்குறியா உனக்கு அசிங்கமா இல்லையா, அவ எவ்வளவு வசதியானவ தெரியுமா? பணத்துல ஸ்டேட்டஸ்ல என்ன விட அதிகம் அவளாவே வந்து உன்ன பொண்ணு கேட்டா அதனால தான் அந்த பையனை கூட்டிட்டு வந்தா அவ முன்னாடி இப்படி அசிங்கப்படுத்திட்டியே என்று கோபப்படுகிறார்.
அந்தப் பையன் ரூமுக்குள்ள வரும்போது ரேணுகா பாத்தா நான் அப்பவே என் பிரண்டு என்று சொல்லிட்டேன். அவன் நந்தினி கிட்டையும் சொல்லி இருக்கா ஆனா அவ வேணும்னே கதவை பூட்டி திருடனு சொல்லி இருக்கா, வரவங்க முன்னாடி நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்த அவ இப்படி பண்ணியிருக்கா, அவ பேசாம போயிருந்தா இந்தப் பிரச்சனை இல்ல அவன் பேசிட்டு போயிருப்பான் இல்லனா நான் அவன உங்ககிட்ட கூட்டிட்டு வந்து நிறுத்தி இருப்பேன் இந்த அசிங்கமா அவமானம் எல்லாத்துக்கும் அவ தான் காரணம் என்று இருவரும் சேர்ந்து சுந்தரவள்ளியை உசுப்பேத்தி விட,என் பொண்ணு பொறந்தநாள்ல எங்க ரெண்டு பேரை அசிங்கப்படுத்துறாளா அவ ஆட்டம் ஆடிட்டா என் ஆட்டத்தை காட்டுகிறேன் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினி ஊரில் நடந்த சந்தோஷமான விஷயங்களை எண்ணி கண்கலங்கி உட்கார்ந்து கொண்டிருக்க, ரேணுகா அர்ச்சனா வீட்டில் அங்கு நடந்த விஷயங்களை பற்றி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறேன். அசோகன் சார் விஷயத்துல ஏற்கனவே மாதவி ரொம்ப கோவமா இருந்தா இப்போ சுரேகாவும் அப்படி ஆயாச்சு என்று சொல்ல அர்ச்சனா நந்தினிக்கு எதிரா எல்லாரையும் மாத்தியாச்சு மிச்சம் இருக்கிறது சூர்யாவோட அப்பா தான், அவரையும் மாத்தணும் என்று சொல்ல ஆனால் அவர்தான் ரொம்ப சப்போர்ட் பண்றாரு என்று சொல்ல அவர் கொஞ்சம் பெரிய மீன் பொறுமையா தான் பெரியவளையா போடணும் என்று சொல்லி அதுக்கு ஒரு பிளான் போடுறேன் என்று சொல்லுகிறார். நான் நினைச்சதெல்லாம் நடக்கணும்னா நீ அந்த வீட்ல இருக்குறது எனக்கு முக்கியம் யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க ரேணுகா ஏன் சோகமா இருக்கீங்க என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லுகிறார்.எனக்குத் தெரியும் சுரேகா அம்மா பிறந்தநாளில் நடந்த பிரச்சனை தானே உங்க சோகத்துக்கு காரணம் வேற இடத்துல இருந்தா உங்களை தாங்குவாங்க என்று நந்தினி முன் நடித்து பேசுகிறார்.
உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க என்று வெளியில் சொல்லிவிட்டு மனதுக்குள் ஆனா உன்ன நான் நல்லா இருக்க விட மாட்டேன் உன் வாழ்க்கையை கெடுத்து நாசமாக்க தான் அர்ச்சனம்மா இங்க என்ன அனுப்பி இருக்காங்க என்று நினைக்கிறார். அந்த நேரம் பார்த்து கல்யாணம் காய்கறிகளை வாங்கி வர அதனை நந்தினி வாங்கி அமைதியாக வைத்துவிட, எப்பவுமே இந்த காய் சரி இல்ல அந்த காய் சரி இல்லன்னு சொல்லுவீங்க இப்ப எதுவுமே சொல்லல என்று கேட்க, கல்யாணம் என்னாச்சு என்று கேட்க அதற்கு ரேணுகா நேற்று நடந்த விஷயத்தை நினைச்சு கவலைப்படறாங்க என்று சொல்ல கல்யாணம் அதெல்லாம் நினைச்சு நீ கவலைப்படாதம்மா என்று சொல்லுகிறார். எனக்கு இந்த ஊரோட பழக்கவழக்கம் எதுவும் எனக்கு புரியல. ஊர்ல ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கிட்டா தப்பா பாப்பாங்க அதனாலதான் எல்லாத்தையும் அவசரப்பட்டு முடிவு பண்ணிட்டேன். அந்தப் பையன் ரூமுக்குள்ள போனத நான் கண்ணால பாக்கல செவர் ஏறி குதிச்சத வச்சு தப்பா நெனச்சுட்டேன் என்று வருத்தப்பட அதற்கு கல்யாணம் அவ நேர்மையான பையனா இருந்தா நேர் வழியில் வர வேண்டியதுதானே என்று சொல்லி நந்தினிக்கு ஆறுதலாக பேசுகிறார். சூர்யா வெளியில் கிளம்பி கொண்டிருக்க அருணாச்சலம் கூப்பிட்டு எங்கேயாவது வெளியே போறியா என்று கேட்க ஆமா டாடி ஒரு கையெழுத்து போட வேண்டியது யாருக்கு போறேன் என்று சொல்ல சூப்பர் சூர்யா இப்பதான் பழைய சூர்யா எட்டிப் பார்க்கிறான் என்று சந்தோஷப்படுகிறார்.
நீ கம்பெனில நடந்துக்கிட்ட விஷயம் ரொம்ப சூப்பர் ஜெயிக்கிறது, தோற்க்கிறதை தாண்டி எல்லாமே சூப்பரா பண்ணி இருந்த, ஏதோ கெட்ட நேரம் அந்த காண்ட்ராக்ட் கிடைக்காம போயிடுச்சு அதுக்காக திரும்பவும் குடி பப்புனு போயிடாத என்று சொல்ல நான் யோசிக்கிறேன் டாடி என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து சுரேகா வர கூப்பிட்டு எதிரில் நிற்க வைக்கிறார். காலேஜ்ல உன் கூட படிக்கிறவன் உன் முன்னாடியே வரக்கூடாதுன்னு நான் வான் பண்ணி இருக்கேன் அப்புறம் எப்படி ரூமுக்குள் வந்தான் என்று கேட்க அவன் என்னோட பிரண்டு என்று சொல்ல அவன் உன் பிரண்டு உன் பின்னாடி சுத்தினவன் எல்லாமே எனக்கு தெரியும் என்று சொல்ல உடனே சுரேகா அவ நம்மள மதிக்கவே மாட்டான் கண்டுக்கவே மாட்டான் இப்ப என்ன பொறுப்பான அண்ணன் மாதிரி கேள்வி கேட்கிறான் என்று யோசிக்க அருணாச்சலம் சூர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என்று கேட்கிறார். உடனே சுரேகா நான் வர சொல்லல அவனாவே வந்துட்டான் என்று சொல்ல அப்ப எப்படி உன் ரூமுக்குள்ள வந்தா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சுரேகா என சொல்வது என தெரியாமல் யோசிக்க, கிப்ட் கொடுத்துட்டு போயிறேன்னு சொன்னா என்று சொல்ல மீதி பிரெண்ட்ஸ் எல்லாம் கீழ தான் இருந்தாங்க அவன் மட்டும் எதுக்கு ரூமுக்குள்ள இருந்தா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சுரேகா ஒன்னும் புரியாமல் அமைதியாக இருக்கிறார். நீ எவ்வளவு பெரிய கேடி என்று எனக்கு தெரியும் நீயா ப்ளான் பண்ணி வர சொல்லிட்டு மாட்டிக்கிட்ட உடனே எல்லார்கிட்டயும் மாத்தி பேசுறியா என்று கேட்கிறார்.
அவன் உன்ன லவ் பண்றான் சரி நீ அவனை லவ் பண்றியா என்று கேட்க அதெல்லாம் இல்லன்னா என்று சொல்லுகிறார். அப்படின்னா இன்னொருவாட்டி உன்னையும் அவனையும் சேர்த்து வச்சு பார்த்தேன் என்றால் அவ்வளவுதான் என்று வார்னிங் கொடுத்துவிட்டு போக அருணாச்சலமும் பொறுப்பான அண்ணனா பேசிட்டு போயிருக்கான் அவன் பேச்சை கேட்டுட்டு ஒழுக்கமா இரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே சுரேகா இதெல்லாம் அந்த அர்ஜுன் பண்ண வேலை என்று புலம்புகிறார்.
உடனே சுரேகா அர்ஜுனுக்கு போன் போட்டு இவ்வளவு சீக்கிரம் கால் பண்ணிட்ட வீட்ல பிரச்சினை எல்லாம் சால்வ் ஆயிடுச்சா என்று கேட்க உன்னால என்ன வீட்ல அவங்க அவங்க வச்சு செய்றாங்க அவங்க கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல என்று கோபப்படுகிறார். டென்ஷன் ஆகாத சுரேகா என்று சொல்ல, எப்படி டென்ஷன் ஆகாம இருக்க முடியும் ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணி சாவடிக்கிறாங்க என்று சொல்லுகிறார். உடனே அர்ஜூன் லவ்ல இது மாதிரி பிரச்சனை வர தானே செய்யும் என்று சொல்லுகிறார். முதல்ல பேசி பழகி பிரண்டா இன்ட்டியூஸ் பண்ணி அதுக்கப்புறம் அப்பா அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கி இருந்தா எப்படி இருந்திருக்கும் ஆனா இப்படி இரண்டு பேரையும் ஒன்னா ரூம்ல வச்சு பார்த்தது தான் பிரச்சனை ஆயிடுச்சு என்று சொல்ல அர்ஜுன் அப்போ உடனே உங்க வீட்ல லவ் பண்றதா சொல்லிடு என்று சொல்லுகிறார். நான் பேசறதுக்கும் இதுக்கும் தேவையில்லாம சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்கா என்று சொல்ல சாரி சுரேகா ஒரு ஆர்வத்தில் அப்படி பண்ணிட்டேன் என்று சொல்ல சரிவை நான் அப்புறம் பண்றேன்னு சொல்லி போனை வைக்கிறார். சூர்யா இப்படி பண்ண மாட்டானே எல்லாம் அந்த நந்தினி தான் ஏத்திவிட்டு இருப்பா மொதல்ல அம்மாகிட்ட சொல்லி ஏதாவது பண்ணனும் என்று யோசிக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி நின்று கொண்டிருக்க மாதவி மற்றும் சுந்தரவல்லி இருக்கும்போது இவ சூர்யாவை கைக்குள்ள போட்டுக்கிட்டு எப்போ நேரம் வருதோ அப்போ அடிச்சு காலி பண்ணிட்டா என்று சுரேகா சொல்லுகிறார். அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் இத்தனை நாளா ஒரு மாமியாரா தான் நீ தோத்துக்கிட்டு இருந்த, ஆனால் இப்போ அம்மாவாவும் நீ தோத்துட்ட என்று சொல்லுகிறார்.
நான் தோத்துட்டேனா என்று சுந்தரவல்லி கேட்க அருணாச்சலம் ஆமாம் என்று சொல்லுகிறார். சூர்யாவிடம் நந்தினி அழுது கொண்டே செய்யாத தப்புகள் தினம் தினம் திட்டு வாங்குறது தண்டனை உங்களுக்கு தெரியாது என்று சொல்லி அழ அதற்கு சூர்யா நந்தினியின் வாயின் மீது கையை வைத்து அமைதியாக இருக்க சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 27-03-25