ரோகினி மீது கோபத்தில் விஜயா,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி மீது கோபத்தில் விஜயா இருக்க முத்து வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மனோஜிடம் நீ போய் ரோகினிய கூட்டிட்டு வா என்று சொல்ல அம்மா பேச்ச மீறி என்னால எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு நீங்க என் விஷயத்துல தலையிடாதீங்க என்று அண்ணாமலை இடம் சொல்ல முத்து கோபப்படுகிறார். அப்பாவுக்கு உன் விஷயத்தில் தலையிட உரிமை இல்லையா அவர் இல்லனா நம்ம யாருமே இல்ல என்று கோபப்பட நீ எதுக்கு இப்ப எகிறிட்டு வர ரோகினி பண்ணது தப்பு அதுக்கு அம்மா கொடுத்து பனிஷ்மென்ட் தான் கரெக்ட் அம்மா சொல்ற வரைக்கும் நான் எதுவும் செய்ய மாட்டேன் நான் இந்த வீட்ல இருக்கறது பிடிக்கலைன்னா சொல்லுங்க போயிடுறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.
உடனே முத்து அண்ணாமலை இடம் பாத்துக்கலாம்பா எல்லாம் சரியாயிடும் என்று சொல்ல அண்ணாமலை எதுவும் பேசாமல் சோகமாக சென்று விடுகிறார். மறுபக்கம் விஜயா பார்வதி வீட்டிற்குச் சென்று நடந்த விஷயங்களை சொல்ல பார்வதி அதிர்ச்சியாகிறார். வீட்ல இருக்கிற ரெண்டு மருமகள விட ரோகிணிய தானே தலை மேல தூக்கி வச்சு ஆடின என்று சொல்ல, நானே செம்ம கோவத்துல இருக்கேன் என் ஆத்திரத்தை கிளப்பாதே என்று கோபப்படுகிறார். உடனே இதுக்கெல்லாம் நீதான் காரணம் என்று பார்வதி மீது பழி போட அவர் அதிர்ச்சியாகி நான் என்ன காரணம் என்று கேட்க நீதான் அவ மலேசியாவில் இருந்து வந்திருக்கா பணக்காரி என்றெல்லாம் சொன்ன என்று சொல்ல எனக்கு தெரிந்தது சொன்ன ஆனா நீ தான் பணக்காரி தெரிஞ்சு விசாரிச்சு கல்யாணம் பண்ண நான் ஒன்னும் மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வை என்று சொல்லலையே என்று சொல்ல விஜயா அமைதியாகிறார். உடனே அந்த மீனாவ போல தான் இவளோ ஒன்னும் இல்லாதவ என்று விஜயா சொல்ல அதற்கு பார்வதி நீ பார்த்து வச்ச பொண்ணு வசதி இல்ல அண்ணன் பார்த்து வச்ச பொண்ணு வசதி இல்ல ரவி தேடிட்ட பொண்ணுதான் பணக்கார பொண்ணு என்று சொல்லுகிறார்.
உடனே விஜயா அந்த பணக்கார பைத்தியமா அது என்ன மதிக்கவே மாட்டேங்குது என்று சொல்லிவிட்டு எனக்கு டென்ஷனா இருக்கு எனக்கு கொஞ்ச நேரம் தனியாக விடு என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கம் முத்து சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க மீனா வீட்ல யாருமே இல்லாத பார்த்து கஷ்டமா இருக்கு என்று சொல்லுகிறார். நானும் அதை தான் யோசிச்சுகிட்டு இருக்கேன் என்று சொல்ல உடனே முத்துவிற்கு ரவியும் மீனாவிற்கு ஸ்ருதியும் போன் போடுகின்றனர் அவர்களிடம் நடந்த விஷயத்தை சொன்னா இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு நாங்க இங்க எப்படி இருக்க முடியும் நாங்க வர பார்க்கிறோம் என போனை வைக்கின்றனர்.
முத்துவுடன் மீனா அத்தை தப்பு பண்ணிட்டாங்க அவங்க பக்கம் இருக்குற நியாயம் என்னவென்று கேட்டிருக்கணும் என்று சொன்னார் அதற்கு முத்து அப்புறம் என்ன அதுக்கு ஒரு போயே ரெடி பண்ணி உடனே சொல்லி இருக்கோம் என்று சொல்லுகிறார். அதற்கு மீனா அவங்க புருஷன் கிட்டயாவது உண்மையை சொல்லி இருக்கணும் அவர்கிட்டயும் சொல்லல பாவம் அவர் தான் கஷ்டப்படுறார் என்று சொல்ல அதுவும் சரிதான் என்று முத்து சொல்லுகிறார் நேத்து லேட்டா வந்தாரு காலை சீக்கிரமா போயிட்டு இருக்காரு என்று சொல்ல எங்க போயிருப்பாரு ரோகினி கூப்பிட போயிருப்பாரா என்று மீனா கேட்கிறார். என் கணக்குப்படி பார்த்தாவது ஒயின் ஷாப்லயோ இல்ல பார்லையோ உக்காந்து குடிச்சிட்டு இருப்பான் என்று சொல்ல அதே மாதிரி மனோஜ் அவருடைய நண்பருடனும் உட்கார்ந்து குடித்துக் கொண்டு என் பொண்டாட்டி பொய் சொல்லிட்டா என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பொய் சொல்லிட்டா என்று சொல்லிக் கொண்டே இருக்க அங்கு இருப்பவர்கள் சிரிக்க, என் பொண்டாட்டி பொய் சொல்லிட்டா என்று சொல்ல அவர்களும் அவர்கள் பொண்டாட்டி செய்த விஷயத்தை சொல்ல அப்ப நம்ம எல்லாரும் ஒரு குரூப் ஆரம்பிச்சிடலாம் நம்ம கஷ்டத்தை குரூப்ல பேசிக்கலாம் என்று முடிவெடுக்க மனோஜ் ஓவராக போதையில் இருக்கிறார். அவரது நண்பர் போதும் என வலு கட்டாயமாக வீட்டுக்கு போக இழுத்துச் செல்கிறார். பிறகு பார்வதி மீனாவுக்கு போன் போட மீனா என்ன சொல்லுகிறார்?அதற்கு பார்வதி என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
