ஈஸ்வரி எடுத்த முடிவு, பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!
ஈஸ்வரி முடிவு ஒன்று எடுக்க, பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலைக்கு கிளம்பி கொண்டு இருக்க பாக்யா ரூமுக்கு வருகிறார். ட்ரெஸ் எப்படி இருக்கு என்று கேட்க சூப்பரா அழகா இருக்க என்று சொல்லுகிறார். உடனே கபோர்ட் திறந்து அதில் ஹேண்ட்பேக் ஒன்றை எடுத்து இனியாவிடம் கொடுக்கிறார். எப்படி இருக்கு என்று கேட்க சூப்பரா இருக்குமா என்று சொல்ல நீ வேலைக்கு போறதுக்கு என்னோட கிஃப்ட் என்று சொல்லுகிறார் உடனே இனியா சந்தோஷப்பட்டு எப்பவுமே நான் வெளியே போகும் போது அட்வைஸ் பண்ணவ இப்போ எதுவும் பண்ணலையா என்று கேட்க ஒன்னே ஒன்னு மட்டும் இருக்கு உன்னோட சம்பளம் நான் எவ்வளவு என்று கேட்கல கேட்கவும் மாட்டேன் எழிலும் செழியனும் எவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னு எனக்கு தெரியாது. நீயும் சொல்ல வேண்டாம் ஆனா தேவையில்லாத செலவு அதிகமாக பண்ணாத என்று சொல்லிவிட்டு கீழே வருகின்றனர்.
பிறகு வீட்டில் இருக்கும் அனைவரிடமும் அம்மா கிப்ட் வாங்கி கொடுத்திருக்காங்க என்று சொல்லி சந்தோஷப்படுகிறார் இனியா சென்றுவிட, மறுபக்கம் கோபி போனில் பேசிக் கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் கேட்டு வந்து கதவை திறக்க பாக்யா நிற்கிறார். உள்ளே வரவைத்து என்ன விஷயம் என்று கேட்க, அத்தையை பார்த்து பேச வந்தேன் என்று சொல்லுகிறார் காபி ஏதாவது கொடுக்கவா என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் சொல்லிவிட்டு பாக்யா ஈஸ்வரியை பார்த்து பேச ரூமுக்கு செல்கிறார்.
இந்த நேரம் ரெஸ்டாரன்ட் போயிட்டு இருப்ப என்ன பாக்க எங்க வந்து இருக்க என்று கேட்க உங்களுக்கு முதுகு வலின்னு தெரிஞ்சதுனால தான் வந்தேன் என்று சொல்லி ஹாஸ்பிடல் கூப்பிடுகிறார். அதெல்லாம் வேணாம் எனக்கு மனசு சரியில்லை என்று சொல்லுகிறார் எல்லாரும் சேர்ந்து என் பையனை வெளியே அனுப்பிட்டிங்க எனக்கு ரொம்ப கவலையா இருக்கு என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல அத்தை அவங்க பசங்க ரொம்ப நல்லவங்க அவங்க அவரை பார்த்துப்பாங்க என்று சொல்லுகிறார். நீங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட நான் வரல அன்னைக்கு போறேன்னு சொல்லும் போது ஜாட மாடையா போ சொன்னவ தானே நீ என்று சொல்ல அன்னைக்கு இருந்த சூழ்நிலை வேற அத்த உங்களுக்கு இப்போ இல்ல எப்ப வேணும்னாலும் நம்ம வீட்டுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் எழில், அமிர்தா, செழியன் ,ஜெனி நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யாவிடம் பாட்டி எப்படி இருக்காங்க என்று கேட்கிறார். வழக்கம் போல வரும் முதுகு வலி தான் என்று சொல்லி வருத்தப்படும் விஷயத்தை சொல்லுகிறார் நீங்க ரெண்டு பேரும் போய் கொஞ்சம் பாருங்க என்று சொல்லுகிறார். உடனே இனியா பாக்யா போனில் நியூஸ் சேனல் பார்க்குமாறு மெசேஜ் ஒன்றை அனுப்ப இவர்கள் போய் வைக்கின்றனர் அப்போது இனியாரm ரிப்போர்ட்டராக அவர் பொதுமக்களிடம் கேள்வி கேட்பது போல வீடியோவை பார்த்து நால்வரும் சந்தோஷப்படுகின்றனர் மறுபக்கம் கோபியும் ஈஸ்வரியும் இந்த வீடியோவை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இனியாவது கோபி போன் போட பிஸியாக வருவதால் பொன் வைத்து விடுகிறார். உடனே ஈஸ்வரி இந்த வேலை பாதுகாப்பா இருக்குமா? நல்ல வேலையா என்றெல்லாம் கேட்க அதெல்லாம் நல்ல வேலை தான் அம்மா எப்பவுமே கூட ஒரு டீம் இருந்துகிட்டு தான் இருப்பாங்க இனிய தனியாளா இருக்க மாட்டா என்று சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் செழியன் வர ஈஸ்வரி செழியனிடம் அந்த செல்வி பையன் பெயில் ஆயிட்டானே தெரியுமா என்று கேட்க அதை சொல்ல தான் பாட்டி நானும் வந்தேன் என்று சொல்லுகிறார். உடனே செழியன். இனியா தான் கொஞ்சம் அப்செட்டில் இருக்கா என்று சொல்ல கோபியும் வந்துவிடுகிறார். பிறகு நடந்த விஷயங்களை கோபியிடம் சொல்ல அப்படியா என்று கேட்கிறார். இனியாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று முடிவெடுக்கின்றனர். முன்னாடி தான் சின்ன பொண்ணு படிச்சுக்கிட்டு இருந்தேன்னு சொன்னா இப்போ வேலைக்கு போற இல்ல நல்ல பையனா பாக்கணும் என்ற சொல்ல கோபியில் நடக்கும்மாமா என்று கேட்கிறார். பண்ணிதான் ஆகணும் கோபி அந்த செல்வியை நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரக்கூடாதுன்னு சொன்னேன் ஆனா அந்த பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு வெச்சி இருக்கா என்று கோபப்படுகிறார்.
கோபி என்ன முடிவெடுக்கப் போகிறார்? பாக்கியாவிற்கு வரும் சிக்கல் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
