நந்தினி அடிக்க பாய்ந்த சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லிக்கு கிரீன் டீ போட சொல்லி, நந்தினியிடம் சொல்ல நந்தினி போடத் தெரியாமல் புஷ்பாவிடம் கேட்க எனக்கு தெரியும் நான் சொல்ற மாதிரி போடுங்க என்று சொல்லி பச்சை மிளகாய் எடுத்து வர சொல்லுகிறார். காரமா இருக்காதா அக்கா என்று சொல்ல இப்படித்தான் பண்ணனும் இங்க இருக்கிறவங்க இப்படி பண்ணா தான் குடிப்பாங்க என்று சொல்லி பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைக்க சொல்லுகிறார். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து டீ தூள் போட சொல்லுகிறார். பிறகு பச்சை மிளகாய் எடுத்து ஊத்தி கிண்ட சொல்லுகிறார். பிறகு காபி போட்டு அதையும் எடுத்துக்கொள்கிறார். சுந்தரவல்லிக்கு போன் கால் வர அவர் போன் பேசிக்கொண்டு இருக்க நந்தினி காபி மற்றும் கிரீன் டீ எடுத்துக் கொண்டு வருகிறார்.
சுந்தரவல்லி இடம் கொடுக்க அவர் எடுத்து ஒரு வாய் குடித்த உடன் கீழே துப்பி விட்டு அந்த டீயை தூக்கி வீசு அது நந்தினியும் முகத்தில் ஊற்றி விடுகிறது. இதெல்லாம் ஒரு டீயா என்று மாதவியை திட்ட இதுதான் நான் போட்ட பிளான் எப்படி இருக்கு என்று சுந்தரவல்லியிடம் கேட்கிறார்.உடனே நந்தினி கண்ண தொறக்க முடியல எரியுது தண்ணி கொடுங்கம்மா கொடுங்கம்மா என்று சொல்லியும் யாரும் கொடுக்காமல் சென்று விட நந்தினி அழுகிறார். உடனே கல்யாணம் வந்து என்னமா ஆச்சு என்று கேட்க நடந்த விஷயங்களை சொல்ல, சரி பண்ணிடலாம் இருமா என்று வெளியே கூட்டி வந்து புஷ்பாவை தண்ணி எடுத்துட்டு வர சொல்லுகிறார். முகத்தை உள்ளே விட்டுவிடுமா என்று சொல்ல நந்தினி அப்படியே செய்கிறார். உடனே நந்தினி புஷ்பா சொன்னதாக செய்த விஷயத்தை சொல்ல கல்யாணம் புஷ்பாவை திட்டி அனுப்புகிறார்.
உடனே ரொம்ப சந்தோஷப்பட்டு சுந்தரவல்லி தோழி ஜெயாவிற்கு ஃபோன் போட்டு நீ சொன்ன மாதிரி என் பொண்ணுங்க கிட்ட சொன்ன அவளுங்களும் செஞ்சுட்டாங்க என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். அவளை சுயமரியாதை தான் அடிக்கணும் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரேன் என்று சொல்லிப் போனை வைக்கிறார். பிறகு கல்யாணம் ஐஸ் கட்டியை கொடுத்து ஒத்தடம் கொடுக்க சொல்லுகிறார். அந்தப் புள்ள தான் சொன்ன நீயும் பச்சை மிளகாய் வச்சு டீ போட்டு இருக்கியாமா அதுக்கு அந்த அம்மா அப்படி ஊத்துவாங்களா என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
உடனே சூர்யா வேகவேகமாக வந்து நீதான் சரக்கு ஒளிச்சு வச்சிருக்க, எங்க இருக்குன்னு சொல்லிடு நீயும் நானும் மட்டும் தான் ரூம்ல இருந்தோம் வேற யாரும் எடுக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார். எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்கு என் பாட்டிலே கொடு என்று சொல்லி சண்டை போடும்படி கேட்கிறார். எனக்கே கண்ணு எரியுது அதுக்காக நான் ஐஸ் கட்டி வச்சிருக்கேன் என்று சொல்லியும் எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை கிடையாது. உடனே கோபப்பட்ட நந்தினி உங்களுக்கு என்ன சரக்கு வேணும் அது தானே வாங்க எடுத்து தரேன் என்று சொல்லி ரூமுக்கு கூட்டி வருகிறார். பின்னாலே வந்த சூரியா என்கிட்ட எதுவும் பேசாத எனக்கு சரக்கு குடு என்று கேட்க மேலே ஏறி சரக்கை எடுத்த நந்தினி இதுதானே உங்களுக்கு வேண்டும் என்று தூக்கிப்போட்டு உடைக்க சூர்யா டென்ஷன் ஆகிறார்.
உச்ச கட்ட டென்ஷனான சூர்யா. நீ என்ன லூசா பைத்தியமா என்றெல்லாம் திட்டுகிறார். இப்ப எனக்கு வேணும் சீக்கிரம் எடுத்துக்கிட்டு வா என்று சொல்ல ,நந்தினி மீதி இருக்கிற பாட்டிலையும் எடுத்துக்கொண்டு வர நந்தினியிடம் இதைக் குடு என்று கெஞ்சுகிறார். ஆனால் நந்தினி அதை ஏன் தூக்கி போட்டு உடைச்ச உன்னை கொன்னுடுவேன் என்று கையை எடுத்துக் கொண்டு வர, எதுக்குடி ஒடச்ச ஏண்டி இப்படி பண்ண, உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்,உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்று கேட்கிறார். இதுக்கெல்லாம் உனக்கு என்ன உரிமை இருக்கு என்று கேட்க, என் கழுத்துல நீங்க தாலி கட்டுனதுக்கு உங்களுக்கு என்ன சார் உரிமை இருக்கு என்று கேட்கிறார். என் வாழ்க்கையே சுக்குநூற உடைச்சு இருக்கீங்களா அதுக்கு என்ன உரிமை இருக்கு என்று நந்தினி அழுது கொண்டு கேட்கிறார். இப்போ நீங்க என்ன சார் நினைக்கிறீங்க ஏதோ உங்க தோப்பில் வேலை செஞ்சுட்டு இருக்க பொண்ணுக்கு இப்படி ஒரு பணக்கார வாழ்க்கை கொடுத்துட்டோம்னு நினைக்கிறீங்களா என்று கேட்க சூர்யா கோபப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நான் பண்ண விஷயம் இவ்வளவு பெருசா நினைக்கல.. கூட நின்னுட்டு இருந்த சூர்யா சரி இப்போ எனக்கு எதிரா நிக்கிறாரு.
அருணாச்சலம் சூர்யாவை தடுத்து பிறகு நண்பனிடம் எனக்காக ஒன்னே ஒன்னு செய் என்று சொல்ல நந்தினி கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து என்னை விட்டுடுங்க என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.