தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நந்தினி அர்ச்சனாவின் தோழியின் காரில் ஏற அவர்கள் பின்னாடி போ என்று அனுப்பி வைக்கிறார்கள். பிறகு காய்கறி வண்டியில் நந்தினி ஏறி மண்டபத்திற்கு வருகிறார். சுந்தரவல்லி கணவருடன் மண்டபத்திற்கு வந்து சூர்யா வந்துட்டானா என்று மாதவியின் கணவரிடம் கேட்கிறார். ஹோட்டல்ல வந்துட்டா அத்தை என்று சொல்லுகிறார். பவுன்சர்ஸ் எல்லாம் வந்துட்டாங்க அத்தை என்று சொல்ல சுந்தரவல்லி அவர்களை வந்து சந்திக்கிறார். அந்த ஐந்து பாடி கார்டில் நந்தினியின் மாமாவும் ஒருவர். சுந்தரவல்லி அவர்களிடம் வந்து நீங்க கிரவுட் கண்ட்ரோல் பண்றது உங்க வேலை கிடையாது. என் பையன் சூர்யா தாலி கற்ற வரைக்கும் இந்த மண்டபத்தை விட்டு வெளியே போகக்கூடாது. அப்படி போயிட்டா என்று நந்தினியின் மாமா கேட்க, அப்படி போனா நீங்க மண்டபத்தை விட்டு வெளியே போக மாட்டீங்க என்று சுந்தரவல்லி மிரட்டுகிறார்.

மண்டபத்தில் சிங்காரத்தை பார்த்த நந்தினியின் மாமா நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க ,சூர்யா தம்பிக்கு கல்யாணம் அதனால வந்திருக்கும் என்று சொன்னவுடன், ஏன் ரூட்டு கிளியர் ஆயிடுச்சு என்று சந்தோஷப்படுகிறார். என்னாச்சு மாமா காலில் கட்டு போட்டு இருக்கு என்று கேட்க விழுந்துட்டேன் மாப்பிள்ளை என்று சொல்லுகிறார். பிறகு அவருக்கு போன் வர கிளம்பி விடுகிறார் நந்தினி மாமா.

மண்டபத்திற்கு மினிஸ்டர் குடும்பம் வர சுந்தரவல்லி குடும்பத்தினர் அவர்களை வரவேற்கின்றனர் அதற்கு மினிஸ்டர் இது என்ன உங்க வீட்டு கல்யாணமா நம்ம வீட்டு கல்யாணம் நாங்களும் உங்க கூட வரவேற்கிறோம் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி பிரம்மாண்டமா அரேஞ்ச் பண்ணி இருக்கீங்க ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல கட்சி கூட்டத்தையே மாநாடு மாதிரி பண்ணுவ என் பொண்ணு கல்யாணம் எப்படி இருக்கும் என்று சொல்லுகிறார்.

ஊர்க்காரர்களான பூசாரி மற்றும் பங்காளிகள் ஒவ்வொருவராக வருகின்றனர். வாசலில் சிங்காரம் நந்தினிக்காக காத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நந்தினியின் மாமா நீ என்ன பண்ற என்று கேட்க பொண்ணு கூட்டிட்டு வர போனவங்க எல்லாம் வந்துட்டாங்க ஆனா நந்தினி மட்டும் இன்னும் வரவில்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார். சிறிது நேரம் கழித்து நந்தினி வேனில் வந்து இறங்க நந்தினி பார்த்தவுடன் நீயும் ப்ளூ நானும் ப்ளூ என்று சொல்லி கையில் கிள்ளுகிறார். உடனே நந்தினி யாருக்கு கல்யாணம் தெரியுமா மாமா என்று சொல்லி சூர்யா சாருக்கு என்று சொன்னவுடன் எனக்கு தான் தெரியுமே என்று சந்தோஷப்படுகிறார்.அவர் இனிமே உன் ரூட்டில் வர மாட்டாரு நீயும் அவர் ரூட்டில் போகாத என்று சொல்ல நந்தினி தள்ளிவிட்டு எனக்கு வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மாதவியும், சுரேகாவும் வர சுந்தரவல்லி அர்ச்சனா எங்கே என்று கேட்க ஹோட்டல் டிராப் பண்ணிட்டு வந்திருக்கோமா ரெடி ஆயிட்டு வருவா என்று சொல்லுகின்றனர்.

சுதாகர் குடும்பத்துடன் வந்து காரில் இறங்க பரவால்ல என் பங்காளி புடிச்சதும் புளியகும்பா தான் புடிச்சிருக்காரு என்று பேசிவிட்டு உள்ளே வருகிறார். சுந்தரவல்லி அருணாச்சலமும் அவர்களை வரவேற்க நல்லவேளை நீங்க இருந்தீங்க எங்க சிங்காரமும் அவங்களோட பொண்ணு நந்தினி வரவேற்பா்களும் நினைச்சேன் அப்படி வரவேர்த்தா நாம இப்படியே திரும்பி போய் எல்லாம் இருந்தேன் என்று சொல்லுகிறார். இப்படி நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா நின்னு கூப்பிடுறது இவ்ளோ அம்சமா இருக்கு தெரியுமா என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் வீட்டில் வேலை செய்யும் கல்யாணத்தை கூப்பிட்டு சுந்தரவல்லி இவங்க அய்யாவோட சொந்தக்காரங்க முதல் வரிசையில் உட்காரவை என்று சொல்ல அவரும் கூட்டிச் சென்று உட்கார வைக்கிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி வருபவர்களை கவனித்துக் கொண்டிருக்க அதை பார்த்து சுதாகர் கடுப்பாகிறார்.

ஆட்டம் பாட்டத்துடன் அர்ச்சனா பல்லக்கில் வந்து இறங்குகிறார். மேடையில் வந்து அர்ச்சனா நிற்க சுந்தரவல்லி அவருக்கு மாலை போட்டு விடுகிறார். அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அர்ச்சனா இறங்கிவிட மாதிரியும் சுரேகாவும் நீ ரூமில் ரெஸ்ட் எடு அர்ச்சனா சூர்யா வந்தவுடன் மேடைக்கு வரலாம் என்று சொல்லுகின்றனர். பிறகு மாதவியும் சுரேகாவும் மாதவியின் கணவரிடம் என்னாச்சு என்று கேட்க, சூர்யாவா ஹோட்டல்ல விட்டுட்டு வந்து இருக்கேன் என்று சொல்லுகிறார். இன்னும் 24 மணி நேரம்தான் இருக்கு அதுக்குள்ள இந்த கல்யாணம் நிக்கணும் என்று மாதவி சொல்ல, சுரேகா நம்ப வேணா அண்ணனை ஒரு வாரம் கடத்திடலாமா என்று கேட்கிறார் அதற்கு மாதவியின் கணவர் ஒரு வாரம் இல்ல ஒரு மணி நேரம் கூட அவன கடத்த முடியாது என்று சொல்லுகிறார். என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருவரும் ஒழிக்க மாதவியின் கணவர் வில்லத்தனமாக சிரிக்கிறார். எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க என்று மாதவி கேட்க சூர்யா அர்ச்சனா வாங்கி கொடுத்த பல லட்சம் மதிப்புள்ள கோட்டை போட்டா தானே ரிசப்ஷன் நடக்கும் என்று சொல்ல ஏன் போட மாட்டான் என்று கேட்கின்றனர். அதற்கு மாதவியின் கணவர் அந்தக் கோட்டை லாண்டரிக்கு போட்டு விட்டேன் என்று சொல்லுகிறார். மாதவி இன்னும் கோபப்படுகிறார். மாமா சொன்ன ஐடியாவும் வொர்க் அவுட் ஆகும் தானகா என்று சொல்ல மாதவி டென்ஷன் ஆகிறார்.

மண்டபத்திற்குள் கார் வர பட்டாசு வெடித்த உடன் மாப்பிள்ளை வந்துட்டாரு என்று சொன்னதைக் கேட்டு மாதவி இன்னும் அதிர்ச்சி அடைகிறார். சூர்யா சட்டை மற்றும் டிரௌசருடன் கையில் சரக்குடன் காரிலிருந்து இறங்குகிறார். இதனை அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லி பார்க்க அதிர்ச்சியாய் நிற்கின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் சூர்யா கோட் போடாமல் வந்து நிற்க, மினிஸ்டர் என் பொண்ணு அந்த கோட்டை பார்த்து பார்த்து டிசைன் பண்ணி வாங்குனா என்று சொல்ல உங்க பொண்ணு வாங்கினா அதை அப்படியே போட்டுக்கணும்னு என் தம்பிக்கு என்ன தலையெழுத்தா என்று மாதவி கேட்கிறார்.

சிங்காரம் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்க எங்க வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க இவங்க எல்லாம் யார் தெரியுமா? எந்திரிங்க முதல்ல என்று எழுப்பி விடுகிறார் அதனை அருணாச்சலம் பார்க்க என்ன நடக்கப் போகிறது? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.