Thalapathy vijay movie 69 poojai, and villain actor Bobby deol introduce..
Thalapathy vijay movie 69 poojai, and villain actor Bobby deol introduce..

தமிழ் சினிமாவில், தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் இதுவரை தெறிக்கவிட்ட அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது தெரிந்ததே.!

இத்தகு மகிழ்ச்சியான தருணத்தில், மேலும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சூட்டோடு சூடாக, தளபதி விஜய்யின் 69-வது திரைப்படம், வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி பூஜை நடைபெறுகிறது. மறுநாள், அக்டோபர் 5-தேதி முதல் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளதாகவும் கோலிவுட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த படப்பிடிப்பு பணிகள் நடக்கும் நிலையில், அதன் பிறகு சுமார் 15 நாட்கள் தளபதி விஜய் தனது அரசியல் மாநாடு குறித்த பணிகளுக்காக ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை விமர்சையாக விக்கிரவாண்டியில் தளபதி விஜய் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், தன்னுடைய இறுதி திரைப்பட பணிகளையும் மிகவும் சிறப்பாக கவனித்து வருகின்றார் தளபதி விஜய். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து, தன்னுடைய அரசியல் பயணம் குறித்தும், சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளது குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய். பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் வெளியாகி உலக அளவில் நானூறு கோடி ரூபாயை தாண்டி மிகப் பெரிய வெற்றிப்படமாக பயணித்து வருகின்றது. விரைவில் அந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்கின்ற அறிவிப்புகளும் இப்பொது வந்துள்ளது.

இந்த சூழலில், கோட் திரைப்படத்தின் கொண்டாட்டங்களே இன்னும் முடியாத நிலையில், தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இப்போது வெளியிட்டு இருக்கிறார் விஜய்.

முதல் முறையாக தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைக்கும் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “கே.வி.என்” புரொடக்சன்ஸ் நிறுவனம் தளபதி-69 திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில், பிரபல இயக்குனர் வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

ஒரு படத்திற்கு வில்லன் கதாபாத்திரம் மிகவும் மிரட்டலாக இருந்து, அவரை ஹீரோ போராடி வீழ்த்தும் வகையில் திரைக்கதை அமைந்தால், ஆடியன்ஸ் ரசிப்பர் என்பதற்கு பல திரைப்படங்கள் உண்டு.

இந்நிலையில், விஜய் எதிர்கொள்ளும் வில்லன் யார்? விஜய் சேதுபதியை புக் செய்யலாமா? என்றிருந்த நிலையில் இதோ வேறொருவர் தீயாய் மிரட்ட வருகிறார். அவர்தான் பாபி தியோல்.

ஏற்கனவே சூர்யாவின் “கங்குவா” திரைப்படத்தின் மூலம், தமிழ் படங்களில் அறிமுகமாகவுள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல், தளபதி-69 திரைப்படத்திலும் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கிறன.

இதில், தளபதி விஜய்யின் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

‘ரீலு, ரியலு ரெண்டுலேயும் நான் பார்க்காத வில்லன்களா.? வர்லாம் வர்லாம் வா.. பாத்துக்கலாம்.!’