ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திடீரென்று நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது