நேரடியா விஷயத்துக்கு வருவோமா.? அதாவது, ‘நாலு கிராமங்கள் சேர்ந்து வாழுற ஒரு பகுதி தான்க செங்கடல். இது ஆந்திரா, தமிழ்நாடு எல்லையில இருக்குங்க. இந்த செங்கடல் பகுதி வீரர்களில் ஒருத்தருதான் ஹீரோ (என்டிஆர்) தேவரா.
இவரு, அப்பவே.. வெள்ளைக்காரர்களுக்கு எதிராக எல்லாம் போராடி இருக்காரு. ஆனா.. இப்ப, பைரா என்கிற ஒருத்தரோட சேர்ந்துகிட்டு சட்ட விரோதமா கடத்தல் வேலையை செய்றாரு; அப்புறமா அந்த வேலையை நிறுத்துறாரு. பாருங்க.. இது பைராவுக்கு பிடிக்காம, பகையாளியா ஆகுறாருங்க.
அப்புறம், திடீர்னு தேவரா காணாமல் போயிடுறாரு. இந்த இடத்துல ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கி வந்துடுறாங்க. படம் சும்மா விறுவிறுன்னு நெருப்பா பறக்குது.
இப்ப, ஹீரோ தேவரா தன் அப்பா கண்ட கனவை இலட்சியத்தை நிறைவேற்றனும். அதை அவரு செஞ்சாரா? இதுதான்க பரபரப்பான மீதி திரைக்கதை. செம செமன்னு வெச்சு வெச்சு செஞ்சிருக்காங்க. பக்கா டீம் வொர்க்.!
சரி.. இந்த நிலையில ‘தேவரா’ படத்தோட வசூல் விவரத்தையும் பார்ப்போம் வாங்க..!
இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில், என்.டி.ஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ’தேவரா’. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா தயாரித்த இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்கினார்.
ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் சைஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 172 கோடி வசூலை ஈட்டி, பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றது.
படம் வெளியான மூன்று நாட்களில் மட்டும் அனைத்து மொழிகளிலும் சுமார் ரூ. 304 கோடிகளை வசூலித்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, ‘தேவரா’ படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மொத்த வசூலில் ரூ. 87.69 கோடி தெலுங்கிலும் மற்ற மொழிகளிலிருந்து மீதம் உள்ள வசூலும் வந்துள்ளது. குறிப்பாக, இந்தியிலும் வெளியாகி கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது.
இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று.. மேலும், சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளும் வைரலாகி வருகின்றன. இதனால், ‘தேவரா டீம் இரண்டாம் பாகம் எடுக்கும் பணியில் ஆயத்தமாகி வருகிறது’ என திரைப் பறவைகள் தெரிவிக்கின்றன. அப்டியா.? அது குறித்து முழு அறிவிப்பு வரட்டும் பார்ப்போம்.
பொதுவாக, ஒன்றை இன்னொன்று முறியடிப்பதும்.. அந்த இன்னொன்றை மற்றொன்று முந்துவதும்.. எந்தத் துறையிலும் சாத்தியம் தானே; எண்ணத்தில் கெத்தும், செயலில் சத்தும் இருந்தால்.!