சினிமா துறையில் நிகழும் பாலியல் புகார்கள் தொடர்கதையாகி வருகின்றன என்பதே தெரிந்ததே. இது, கோலிவுட் முதல், ஹாலிவுட் வரை நீடித்து விசாரணைகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நகுல், சுனைனாவுடன் இணைந்து ‘காதலில் விழுந்தேன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தின் கதை சுமாராக இருந்தபோதும், அப்படத்தின் பாடல் சூப்பர் ஹிட்டடித்ததால், நகுல் முதல் படத்திலேயே உச்சத்திற்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து, சுனைனாவுடன் ‘மாசிலாமணி’ படத்தில் நடித்தார். இந்த படமும் ஓரளவிற்கு ஓடியது. அதன் பிறகு நகுல் அடுத்தடுத்த படத்தில் நடித்தாலும் அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
பல ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லாமல் இருந்த நகுல் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் தான் வாஸ்கோடகாமா.ஆர்.ஜி.கிருஷ்னன் இயக்கிய இந்த படத்தில், வம்சி கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு ஓடியது.
ஆனால், உதவி இயக்குனராக பணியாற்றிய ஏ.எம். சந்துரு, நகுல் குறித்து சொன்ன தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது, உதவியாளர் சந்துரு, நான் வாஸ்கோடகாமா படத்தில் அசோசியேட் இயக்குனராக இரண்டு ஆண்டுகளாக வேலை செய்தேன். ஆனால், கடைசி 10 நாள்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு என்னை கூப்பிடவே இல்லை.
இதற்கு காரணம் நகுல் தான், அவர் படப்பிடிப்பு தளத்தில், என்னிடம் காண்டம் வாங்கி வர சொன்னார். நான் வேலை இருக்கு முடியாது என்றேன். பின் மீண்டும் காலை 3 மணி அளவில், காண்டம் வேணும் என்றார். நான் அப்போதும், முடியாதுன்னு சொல்லி சென்று விட்டேன். இதை மனதில் வைத்துக்கொண்டு நடிகர் நகுல், சந்துரு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் நான் வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். இதனால், இரண்டு ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டது என பேசி இருந்தார். இது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், நடிகர் நகுல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,சமீபத்தில் நான் வாஸ்கோடகாமா படத்தில் நடித்தேன். அந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய சந்துரு என்பவர் தன்னைப் பற்றியும் இயக்குநர் ஆர்.ஜி. கிருஷ்ணன் பற்றியும், என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகைகள் அர்த்தனா மற்றும் சுனைனா பற்றியும் அநாகரிகமாக, தவறாக யூடியூப்பில் பேட்டி அளித்துள்ளார். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து இழிவாக பேசி வரும் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யூடியூப் சேனலில் அவர் பேசிய அந்த காணொலியை நீக்க வேண்டும்’ என நடிகர் நகுல் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எது எப்படியோ.. ‘உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை; பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை தானே’..!